டெல்லி: இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் சுமாராக 1.26 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை அதிகரித்துக் கொண்டார்கள் என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், போன்ற ஆறு நிறுவனங்கள் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் சுமாராக 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை அதிகரித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் மீதம் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், ஹெச் டி எஃப் சி ஆகிய நிறுவன பங்குகள் தங்களின் சந்தை மதிப்பை கொஞ்சம் இழந்து இருக்கிறார்களாம். முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஒரே வாரத்தில் சுமார் 34,450 கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 8.29 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. அதோடு இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட பங்காகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஹெச் டி எஃப் சி பேங்க் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 24,100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்போது இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமாராக 6.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 20,600 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இப்போது இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமாராக 2.90 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
கோட்டக் மஹிந்திரா பேங்க் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 20,200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்போது இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமாராக 3.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications