மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக நான்கு முறை வட்டியை குறைத்துள்ள நிலையில், இந்த முறையும் வட்டியை குறைக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டியைக் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், ஆர்.பி.ஐ பணப்புழக்கத்தினை அதிகரிக்க வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் 4 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே நான்கு முறை 1.10 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையும் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து, 5.4 சதவிகிதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க இது பெரிதும் உதவும் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே நான்கு முறை வட்டியை குறைந்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த முறையும் வட்டி குறைப்பை செயல்படுத்துமா? வட்டி குறைப்பு இருக்குமா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
அதிலும் நடப்பு ஆண்டில், கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த வரி விகித குறைப்பு நடந்த நிலையில், இந்த முறையும் வட்டி விகித குறைப்பு இருக்குமா? என்று பலரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம்.
தற்போது 5.40 சதவிகிதத்திலிருந்து, 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவிகிதமாக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த முறையும் இந்திய ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் இந்த வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றும், அதிலும் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் இந்த வட்டிவிகித குறைப்பால், விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications