பிபிசிஎல்லை தனியார்மயமாக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவை.. அதிகாரிகள் கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பி.பி.சி.எல்லை தனியார்மயமாக்கவோ, அல்லது அதன் பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தினை அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த தனியார்மயாமாக்கல் திட்டத்திற்கு பாரமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிலும் 53.3 சதவிகிதம் பங்கினை வைத்திருக்கும் அரசு, தனியாருக்கு இதை விற்க முயன்று வருகிறது என்று, இதன் வளர்ச்சி பற்றிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிபிசிஎல்லை தனியார்மயமாக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவை.. அதிகாரிகள் கருத்து!

அரசுக்கு சொந்தமான, நீண்டகாலமாக எரிபொருள் சில்லறை விற்பனை துறையில் இருக்கும் இந்த பிபிசிஎல் நிறுவனம் தனியார்மயமாக்கல் என்பது, இத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக அரசாங்கத்தின் 1.05 லட்சம் கோடி முதலீட்டு இலக்கில் மூன்றில் ஒரு பங்காவது சந்திக்க இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி சந்தையின் முடிவில் பிபிசிஎல் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தின் மதிப்பு சுமார் 1.02 லட்சம் கோடி என்றும், இந்த நிறுவனத்தின் 2 சதவிகித பங்கு விற்பனை கூட 26,500 கோடி ரூபாயை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தில் 51.1 சதவிகித பங்குகளில் 34.1 சதவிகித பங்குகளை நிர்வாக கட்டுப்பாடுடன், பங்குதாரருக்கு விற்கும் திட்டத்தினை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தியது. அந்த சமயத்தில், இந்த நிறுவனத்தின் பங்குகளை முடக்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லண்டனை சேர்ந்த பிபி பிஎல்சி, குவைத் பெட்ரோலியம், மலேசியாவின் பெட்ரோனாஸ், ஷெல்- சவுதி அராம்கோ மற்றும் எஸ்சார் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க, தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் இத்துறையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய சவுதியின் சவுதி அராம்கோ நிறுவனம், டோட்டல் எஸ்.ஏ நிறுவனங்களுக்கு, பி.பி.சி.எல் ஒரு கவர்ச்சிகராமான கொள்முதல் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம், மும்பை, கொச்சின், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்து வருகிறது. இது சுமார் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றம் திறன் கொண்டது என்றும், இதற்கு 15,078 பெட்ரோல் பம்புகளும், 6004 எல்.பி.ஜி விநியோகஸ்தர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bpcl privatization
English summary

Government plan to privatise BPCL, but it's needs Parliament permission

Government plan to privatise BPCL, but it's needs Parliament permission to privatize or stake sale
Story first published: Sunday, September 29, 2019, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X