பட்டையைக் கிளப்பும் விற்பனை.. மகிழ்ச்சியில் ஈகாமர்ஸ் 'புள்ளிங்கோ'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வருடத்தின் பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில் அனைத்து தரப்பினரும் இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு பல அதிரடி தள்ளுபடிகளை அள்ளி வீசி வருகிறனர். இதில் முக்கியமாக ஆன்லைன் ஷாப்பிங் தளமான பளிப்கார்ட் மற்றும் அமேசான் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

 

பண்டிகை காலத்திற்காகவே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சிறப்பு விற்பனையைத் துவங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத் தொய்வு, வேலைவாய்ப்பில் இருக்கும் மந்த நிலை, குறைந்த அளவிலான பணப் புழக்கம் இருக்கும் இந்தக் காலத்தில் இந்த வருடம் பண்டிகை கால விற்பனை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமேசான், பிளிப்கார்ட்-இல் சிறப்பான விற்பனை பதிவாகியுள்ளது.

போட்டி

போட்டி

வால்மார்ட் முதலீட்டில் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனம் இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகத்தைப் பெறுவதில் மிகப்பெரிய அளவில் போட்டிப்போட்டு வருகிறது.

இந்தியாவில் பிளிப்கார்ட் மட்டுமே ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அமேசான் வந்த பின் மொத்த ஈகாமர்ஸ் வர்த்தகமே மாறிவிட்டது. இந்நிலையில் வால்மார்ட் ஈகாமர்ஸ் தளத்திற்குள் நுழைந்த பின்பு பிளிப்கார்ட் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அமேசான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் The Big Billion Days என்ற பெயரில் பண்டிகை காலச் சிறப்பு விற்பனையை ஒவ்வொரு வருடம் போல இந்த வருடமும் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட்-இன் விற்பனை சனிக்கிழமை இரவு 8 மணிக்குத் துவங்கியது. அமேசானின் India's Great Indian Festival சிறப்பு விற்பனை சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு ப்ரைம் வாடிக்கையாளருக்கு மட்டும் திறக்கப்பட்டது. 12 மணிநேரத்திற்குப் பின்பு பிற வாடிக்கையாளர்களுக்குத் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

இந்நிலையில் பிளிப்கார்ட்-இன் முதல் விற்பனையில் மட்டும் நிறுவனம் 2 மடங்க அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதிலும் முக்கியமாக டிராவல் பிரிவில் கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 12 மடங்கு அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல் எப்போது இல்லாமல் இந்த வருடம் Tier II, III, IV நகரங்களில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளதாகப் பிளிப்கார்ட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

இலக்கு

இலக்கு

இந்நிலையில் பிளிப்கார்ட் இந்த வருடம் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான விற்பனையைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அமேசான்

அமேசான்

அமேசான் நிறுவனத்தின் India's Great Indian Festival விற்பனையின் முதல் 36 மணிநேரத்தில் மட்டும் சுமார் 750 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் பேஷன் மற்றும் மொபைல் பிரிவில் அதிகமான விற்பனையைப் பெற்றுப் பிளிப்கார்ட் உடன் மாறுப்பட்டு உள்ளது.

மேலும் அமேசானின் பேஷன் விற்பனை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 4.6 மடங்கு அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

First day sales: Amazon and Flipkart says Awesome

Flipkart claims that it registered 2X sales growth on day one of the latest festive sales compared to last year’s opening day sales Amazon didn't mention any numbers, but said 66% of the Prime members who shopped with them came from small towns
Story first published: Monday, September 30, 2019, 8:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X