26% விற்பனை சரிவு..! 17% ஏற்றுமதி சரிவு..! முழி பிதுங்கும் மாருதி சுசூகி..!

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று அக்டோபர் 01, 2019 செவ்வாய்க்கிழமை, தங்கள் நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் 2019-ம் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

எப்படியும் 2019 செப்டம்பரிலாவது ஓரளவுக்கு வியாபாரம் அதிகரிக்கும் என பெரிதாக எதிர்பார்த்தவர்களுக்கு நஷ்டமே மிஞ்சியது. செப்டம்பர் 2018-ல் மொத்தம் 1,62,290 கார்களை விற்று இருந்தார்கள். ஆனால் செப்டம்பர் 2019-ல் வெறும் 1,22,640 கார்களை மட்டுமே விற்க முடிந்தது என பதிவு செய்து இருக்கிறார்கள்.

உள்நாட்டில் கடந்த செப்டம்பர் 2018-ல் 1,53,550 வாகனங்களை விற்று இருந்தார்களாம். ஆனால் இந்த செப்டம்பர் 2019-ல் வெறும் 1,12,500 கார்களை மட்டுமே விற்க முடிந்ததம். ஆக உள் நாட்டு வியாபாரத்தில் சுமாராக 26 சதவிகித சரிவு.

செட் 1

செட் 1

மாருதி சுசூகி நிறுவனத்தின் மினி கார்களாக ஆல்டோ, வேகனார் போன்றவைகள் மொத்தம் 20,085 கார்களை மட்டுமே 2019 செப்டம்பரில் விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த 2018 செப்டம்பரில் இதே ரக கார்களில் 34,971 கார்களை விற்றார்களாம்.
அதற்கு அடுத்த காம்பேக்ட் செக்மெண்ட் மாடல்களான ஸ்விட்ப், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசயர் ரக கார்களில் 57,179 கார்களை மட்டுமே 2019 செப்டம்பரில் விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த 2018 செப்டம்பரில் இதே ரக கார்களில் 74,011 கார்களை விற்றார்களாம்.

செட் 2

செட் 2

மிட் சைஸ் செக்மெண்ட் மாடல்களான சியாஸ் ரக கார்களில் 1,715 கார்களை மட்டுமே 2019 செப்டம்பரில் விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த 2018 செப்டம்பரில் இதே ரக கார்களில் 6,246 கார்களை விற்றார்களாம்.
யுடிலிட்டி செக்மெண்ட் மாடல்களான விட்டாரா பிரஸ்ஸா, எஸ் க்ராஸ், எர்டிகா ரக கார்களில் 21,526 கார்களை மட்டுமே 2019 செப்டம்பரில் விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த 2018 செப்டம்பரில் இதே ரக கார்களில் 21,639 கார்களை விற்றார்களாம்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

2019 செப்டம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த மாருதி சுசூகி வாகனங்களின் எண்ணிக்கை 7,188. ஆனால் 2018 செப்டம்பரில் மொத்தம் 8,740 கார்களை ஏற்றுமதி செய்தார்களாம். ஆக மாருதி சுசூகியின் மொத்த ஏற்றுமதி செப்டம்பர் 2019-ல் மட்டும் சுமாராக 17.7 சதவிகிதம் சரிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் தன் புதிய என்ட்ரி லெவல் காராக எஸ்-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தி சக போட்டியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி

தள்ளுபடி

சமீபத்தில் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களின் விலையை கடந்த செப்டம்பர் 25, 2019 அன்று 5,000 ரூபாய் வரை குறைத்தது. இந்த அடிப்படைய் விலை குறைப்புகளுடன், மேலும் பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை 1,00,000 ரூபாய் வரை குறைத்து அதிரடி காட்டியது. ஆனாலும் செப்டம்பர் 2018-ல் செய்த விற்பனையை, செப்டம்பர் 2019-ல் தொட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை

நம்பிக்கை

கடந்த செப்டம்பர் மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தினை விட, 2019 செப்டம்பர் மாதத்தில் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கையை தெரிவித்தது. அதிலும் செப்டம்பர் 29 - 30 ஆகிய தேதிகளில் விற்பனை இன்னும் வெகுவாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னது. சொன்னது போலவே கடந்த ஆகஸ்ட் 2019-ஐ (1,06,413) விட செப்டம்பர் 2019-ல் (1,22,640) விற்பனை அதிகரித்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+