பிரதமர் மோடி 2.0 அரசில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில், ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தடை, நாளை (அக்டோபர் 2) முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட உள்ளது.
அதிலும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் இந்த பிளாஸ்டிக் தடையை நாடு முழுவதும் தடை செய்யப்படும் என்றும் பல முறை தொடர்ந்து மத்திய அரசு கூறிவந்தது.

இந்த நிலையில் இதன் எதிரொலியாக சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே, ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தபடும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் பேப்பர் கவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அனுதினமும் நாம் கண்கூடவும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், நாளை முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படவிருக்கும் இந்த பிளாஸ்டிக்கினால், பேப்பர் கவர்களின் உபயோகம் அதிகம் இருக்கும் என்றும், இதனால் பேப்பருக்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் பேப்பர் சம்பந்தமான பங்குகளின் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. அதிலும் இத்திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில், சில பங்குகள் கிட்டதட்ட இருமடங்கு ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில், மலு பேப்பர் மில்ஸ் 95 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30ல் வெறும் 20 ரூபாயாக இருந்த இந்த பங்கின் விலை, செப்டம்பர் 30 அன்று 38.90 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே ஸ்டார் பேப்பர் மில்ஸ், புதும்ஜி பேப்பர் புராடக்ஸ் (Pudumjee Paper Products), பால்கிருஷ்ணா பேப்பர் மில்ஸ் (Balkrishna Paper Mills), ஹை-டெக் விண்டிங்க் சிஸ்டம்ஸ் அண்ட் ஜீனஸ் பேப்பர் & போர்டுகள் போன்ற நிறுவனங்கள் 50 - 85% ஏற்றம் கண்டுள்ளன.
ஏற்கனவே ஓடிசா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதோடு, இதற்காக அபராதமாக பெரும் தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த தீவிர நடவடிக்கையால், பேப்பர் சம்பந்தமான தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் பங்கு சந்தையில் பேப்பர் சம்பந்தமான இந்த பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் காலத்தில் இது இன்னும் தேவையை அதிகரிக்கும் என்பதாலும், விலையேற்றம் காண வாய்ப்புகள் உள்ளது என்றும் கோட்டக் செக்யூரிட்டீஸ் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications