மும்பை : கடன் பிரச்சனையால் தவித்து வந்த அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக நிப்பான் லைஃப் நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி நிறுவனம் தற்போது தனது சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பையை அடிப்படையாக கொண்ட திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.478 கோடி ரூபாயயை செலுத்தவில்லை என்றும், மேலும் ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கூறியுள்ள திவான் ஹவுஸிங் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 200 கோடி ரூபாய் செலுத்த தவறியதாக கூறியுள்ளது. மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலையில், அதன் மாற்ற முடியாத கடனீடுகளுக்கு இடையில் (non-convertible debentures) அதன் நிலுவை தொகையை எதிர்பார்க்கிறது ரிலையன்ஸ் நிப்பான். ஆனால் ஏன்.பி.எஃப்.சி அதை திரும்ப செலுத்தவும் தவறி விட்டது என்றும் கூறியுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல் சர்ச்சையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் நிப்பான் ஏ.எம்.சி, டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் செலுத்த வேன்டிய தொகையாக 478 கோடி ரூபாயைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இது குறித்து டி.ஹெச் எ.ஃப்.எல் நிறுவனம் விரைவில் பதில் தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருக்கும் டி.ஹெ.எஃப்.எல் நிறுவனம், பத்திரதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையின் வெளிப்பாடு 41,000 கோடி ரூபாய் என்றும், இதே வங்கிகளும் 27,527 கோடி ரூபாய் கோரியுள்ளன. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை கிடைக்குமா எப்போது கிடைக்கும்? என்ற கேள்வியைத் தான் இது எழுப்பியுள்ளது.
முன்னதாக கடன் பிரச்சனையில் காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 75 சதவிகிதத்தை நிப்பான் லைஃப் சமீபத்தில் வாங்கியது. இதன் பின்னரே இந்த நிறுவனம் ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் நிப்பான் நிறுவனம் சுமார் 7,800 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிப்பானின் மிகப்பெரிய பங்குதாரராக ஆனது நிப்பான் லைஃப் நிறுவனம். இதன் பின்னரும் மிகுந்த கடன் பிரச்சனையில் இருக்கும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் தனது மியூச்சுவல் ஃபண்ட் வணிகத்தில் உள்ள அனைத்து பங்குகளையும் கூட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நிலையில் இப்படி பிரச்சனை தலைதூக்கியிருப்பது, நிப்பான் நிறுவனத்தினை பெரும் கவலையிலேயே ஆழ்த்தியுள்ளது. எனினும் வரும் வெள்ளிக்கிழமை வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள நிலையில், அன்றேனும் ஏதும் சாதகமான பதில் கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications