மாருதி சுசூகியின் 2019 செப்டம்பர் மாத விற்பனை விவரங்கள் வெளியானது, இந்தியப் பொருளாதார சரிவில் தொடர்ச்சியாக சுமார் 24 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. அதோடு லட்சுமி விலாஸ் பேங்க், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி போன்ற வங்கிகளின் பெயர் கெட்டு செய்திகளுக்காக அடிபட்டுக் கொண்டே இருப்பதால் சென்செக்ஸும் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,667 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,813 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது சுமார் 37,941 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமார் 725 புள்ளிகள் இறக்கம் கண்டு இன்றைய நாளுக்கான குறைந்த பட்சம் புள்ளியான 37,941 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பி.எஸ்.இ-யில் 2,485 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 536 பங்குகள் ஏற்றத்திலும், 1,815 பங்குகள் இறக்கத்திலும், 134 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இப்போது வரை மொத்தம் 2,489 பங்குகளில் 34 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 211 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி, மீடியா போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி, எஸ்பிஐ, பிபிசிஎல், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பிபிசிஎல், இந்தியன் ஆயில், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஹெச் யூ எல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, க்ராசிம் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications