சென்னை : பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் நோக்கில் இந்திய அரசின் நிதித்துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை ஒரே மாதிரியாக மாற்றி அமைக்க இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) முடிவு செய்து உள்ளது.
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. மேலும் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரி மாற்றி அமைக்கும்படியும், அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த அறிக்கையில் காலை 9 - மாலை 3 மணி வரையிலும், இதே காலை 10 - 4 மணி வரையிலும், மற்றொரு நேரமாக காலை 11 - மாலை 5 மணி வரையிலும் என 3 வகையாக வாடிக்கையாளர் சேவை நேரத்தை அறிவித்திருந்தது, மேலும் இதில் ஏதாவது நேரத்தை தேர்ந்தெடுக்கும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் படி தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் சேவை நேரத்தை காலை 10 - மாலை 4 மணி வரை ஒரே மாதிரியாக இருக்கும்படி மாற்றி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்களுக்கு, முன்பை விட இன்னும் கூடுதலாக 30 நிமிட சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகம் மட்டும் அல்ல மத்திய பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் இதே நேரம் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. மேலும் வங்கி ஊழியர்களுக்கான மதிய உணவு இடைவேளையானது மதியம் 2 மணி முதல் - 2.30 மணி வரை என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications