நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 31 நாட்களில், 11 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் பண்டிகை காலத்தில், வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும், இந்த காலத்தில் அதிக தேவை இருக்கும் என்பதால், பண நெருக்கடி ஏற்படலாம் என்றும், இதனால் மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு புறம் இந்த விடுமுறை நாட்களில் பணப்பற்றாக்குறையை நீக்க, ஏடிஎம்களில் வழக்கம் போல பணம் நிரப்பப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டாலும், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லதே.
இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி தொடங்கி 2ம் தேதியே வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6,7 தேதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டும், 8ம் தேதி தசரா பண்டிகையொட்டியும் வங்கிகள் விடுமுறை என்றும் கூறப்படுகிறது.
இது தவிர அக்டோபர் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 13ம் தேதி ஞாயிற்றுகிழமையன்றும் விடுமுறை நாட்களாகும். மேலும் அக்டோபர் 20ம் தேதி மற்றும் 26ம் தேதி நான்காவது சனிக்கிழமையன்று, 27ம் தேதி தீபாவளி பண்டிகை எனவும், இதே 28 மற்றும் 29ம் தேதிகளில், வட மாநில பண்டிகையான கோவர்த்தன பூஜை மற்றும் பாய் தூஜ் எனப்படும் பண்டிகைகளால் விடுமுறை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டியலில் தசரா, தீபாவளி மற்றும் இன்னும் பல விடுமுறைகளை சேர்த்து 11 நாட்கள் விடுமுறை என்றும் கூறப்படுகிறது. இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் இதனால் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன்னெச்சரிக்கையாக செலுத்தி விடலாம், ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஸ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில் அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம். ஆக மக்களே உஷாராயிருங்க..
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications