இந்திய வங்கிகள் பாதுகாப்பானவையாகவும் நிலையானவையாகவும் உள்ளன என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கியின் பிரச்சனைக்கு பிறகு, கூட்டுறவு வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருப்பவர்களிடையே இது ஒரு பீதியை கிளப்பியுள்ளது.
இதனால் இந்திய வங்கிகள் பாதுகாப்பானாதாகவும் நிலையானதாகவும் உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களிடையே உறுதியளிக்க விரும்புகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் பாதுகாப்போடு தான் இருக்கிறது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தம் வகையில் வதந்தி பரப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய வங்கிகள் பாதுகாப்புடனும் நிலைத்தன்மையோடும் உள்ளன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆக மக்கள் எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும், இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம் எனவும், யாரும் இந்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னரே எச்சரிக்கை
இதற்கு முன்பாக சில நாட்களுக்கு முன், கடந்த செப்டம்பர் 26ம் தேதியும் இதே போன்ற எச்சரிக்கை அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதைக் கருத்தில் கொண்டு மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பஞ்சாப் அன்ட் மும்பை கூட்டுறவு வங்கியின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் பிஎம்சி வங்கி 4,355 கோடி ரூபாய் கடனை வரம்பு மீறி வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
பி.எம்.சிக்கு கடிவாளம்
மேலும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வங்கியை புதுபிக்கவோ அல்லது எந்த வழங்கலும், முதலீடும் செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது, முன்பு தினசரி ஒரு வாடிக்கையாளர் 1000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கொள்கையினை தளர்த்தி, தற்போது பி.எம்.சி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கிலிருந்து தினசரி 10,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட்
மக்களின் பணத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய வங்கிகளே இப்படி இருக்கலாமா? என்று பலர் ட்விட்டரில் கருத்து பரப்பி வருவதையடுத்து, நமது பேங்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானது தான், ஆனால் அதில் செய்யப்படும் டெபாசிட்கள் தான் காணமல் போய்விடுகின்றன. ஏதோ சினிமா கதைகளில் வருவது போல ஆப்ரேஷன் சக்ஸஸ், பேஷன்ஸ் டெட் என்பது போல இருக்கிறது என்றும் ட்விட்டரில் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications