Recommended Video
டெல்லி : வரவிருக்கும் பண்டிகை சீசனை தொடர்ந்து நாடு முழுவதும் லோன் மேளாக்கள் எனப்படும், கடன் திருவிழாக்கள் இன்று முதல், முதல்கட்டமாக 250 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த கடன் மேளாக்களை நடத்த உள்ளன.

கடந்த மாதம், ஒரு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பண்டிகை காலத்தில் மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, இப்படி ஒரு லோன் மேளாக்களை தொடங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் அதன் எதிரொலியாக இந்த கடன் மேளாக்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கடன் மேளாக்கள் மூலம் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்சாலைகள் மற்றும் வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல கடன்களை இந்த மேளாக்களில் உடனடியாக பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வரவிருக்கும் விஜயதசமி, சரஸ்வதி பூஜா, ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் இந்த கடன் மேளாக்கள் இருக்கும் என்றும், இது பின்னர் தீபாவளி பண்டிக்கைக்கும் முன்னதாக 150 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 21ம் முதல் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் 48 மாவட்டங்களில் எஸ்.பி.ஐ முன்னணி வங்கியாளாராக உள்ளது, இதே போல் பேங்க் ஆப் பரோடா 17 மாவட்டங்களில் முன்னணியாகவும் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் செயல்திறன் மதிப்பாய்வின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 400 மாவட்டங்களில் பொதுத்துறை அவுட் ரீச் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்தன. இதில் தனியார் துறையும் சேர விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கடன் வழங்கும் திட்டம் விழாக்காலங்களில் மக்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பண்டிகை காலங்களில் சிறு வர்த்தகர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications