கடந்த பத்து ஆண்டுகளில் டாபர் இந்தியா தனது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 1அன்று இந்த பங்கின் விலையானது 71 ரூபாயாக இருந்த நிலையில், அக்டோபர் 1, 2019 அன்று 438 ரூபாயாக இருந்துள்ளது. கிட்டதட்ட 367 ரூபாய் 10 ஆண்டுகளில் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்திற்கு முதலீட்டாளர் ஒருவர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அவரால் சுமார் 1,408 பங்குகளை வாங்கியிருக்க முடியும். இந்த நிலையில் இந்த பங்கின் தற்போதைய விலை 438 ரூபாய் என்ற நிலையில், இன்று அவர் 6,16,704 ரூபாய் லாபத்தில் இருந்திருப்பார்.
நல்ல லாபம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த பங்கின் விலையானது 3.43% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் 0.19% வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டாபர் இந்தியா இந்த விஷயத்தில் நிலையான செயல்பாட்டுடனேயே இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் கண்ட நல்ல வளர்ச்சியினால், இதன் பங்கு விலையும் நல்ல ஏற்றம் கண்டதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1,445.29 கோடி ரூபாயாக நிகர லாபத்தை சந்தித்துள்ளது. இதே கடந்த மார்ச் 2010ல் 502.43 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு பங்குக்கு ரூ.8 லாபம்
இதே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இதன் வருவாய் 8,811.16 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே கடந்த 2010 மார்ச்சில் 3,428.76 கோடி ரூபாயாக வருவாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 8 ரூபாய் லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 2010ல் 6 ரூபாய் லாபத்தினை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் கடன் கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் 0.03% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2010ல் 0.18% இருந்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனை அதிகரிப்பு
இதே நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் மொத்த நிகரலாபம் 10.24% அதிகரித்து, 363.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் இதன் நிகர விற்பனை அதிகரித்திருந்தாகவும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிப்பு
இதே இதன் வருவாய் 9.25% அதிகரித்து, 2,273.29 கோடி ரூபாயாகவும், இதே இதற்கு முந்தைய ஆண்டில் 2,080.68 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த 2018 - 2019ல் இதன் நிகர லாபம் ரூ.1446.25 கோடி ரூபாயாகவும், இதே 2017 - 2018ல் 1,357.74 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில் வருவாய் கடந்த 2018 - 2019ல் 8,829.22 கோடி ரூபாயாகவும், இதே 2017 - 2018ல் 8,053.52 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும்
மேலும் வரவிருக்கும் பண்டிகை கால பருவத்தில் விற்பனையானது அதிகரிக்கும் என்றும், மேலும் பருவமழையும் நன்கு பெய்துள்ளதால், இது மேலும் இது விற்பனையை ஊக்குவிக்கும் என்றும், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இது நல்ல வளர்ச்சியை காணும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது, இது தவிர டிஸ்டிரிபியூசன் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில், பல விரிவாக்கங்களை செய்து வருவதாகவும், இதனால் வரவிருக்கும் காலாண்டுகளிலும் இந்த பங்குகள் நல்ல முன்னேற்றத்தை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications