டெல்லி : பலவீனமான தேவைகள் மற்றும் உள்நாட்டு தேவை நிலைமைகள், தனியார் முதலீடுகள் குறைந்துள்ளது என இவற்றின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு இன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6.1% மாக குறைத்துள்ளது. இது முன்னர் 6.9% மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், பல விதமாக குறியீடுகள் உள்நாட்டு தேவை நிலைமைகள் மிகப் பலவீனமாக உள்ளன என்றும் கூறியுள்ளது. மேலும் தொழில்துறை குறித்த குறியீடானது முடக்கப்பட்ட நிலையில், மூன்றாவது காலாண்டிலும் மந்த நிலையிலேயே காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் இந்தக் குழு, அண்மையில் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தனியார் நுகர்வு வலுபடுத்தவும், முதலீட்டு நடவடிக்களை ஊக்குவிக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை மீட்டெடுக்க, இன்னும் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் இந்த குழு கூறியுள்ளது. குறிப்பாக அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விகிதம், 30%லிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது, இதே புதிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் 15%மாக குறைத்தது நினைவு கூறத்தக்கது.இது போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 2019 - 2020ம் ஆண்டில் மீதமுள்ள காலகட்டத்தில் பணவீக்கம் குறிப்பிட்ட இலக்குக்கு கீழ் இருக்கும் என்றும், மேலும் உள்நாட்டு வளர்ச்சியில் வளர்ச்சி காணும் போது இந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வரும் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
மேலும் வளர்ச்சியை புதுப்பிக்கும் நோக்கில் தான் ஆர்.பி,ஐ இப்படி ஒரு வட்டி குறைப்பை மேற்கொண்டுள்ளது என்றும், பணவீக்கமும் இந்த நடுத்தர காலத்தில் 4%மாக இருக்கும் என்பதையும் ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) மதிப்பு 3.4 சதவிகிதமாக திருத்தப்பட்டாலும், அது இரண்டாவது பாதியில் 3.5 - 3.7 சதவிகிதமாக இருக்கும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆர்.பி.ஐ கடந்த பிப்ரவரி மாததில் இருந்து தற்போது வரை தளர்த்தப்பட்ட, கொள்கை தளர்த்தலின் தாக்கம் படிப்படியாக பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இது தேவையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தவிர கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் புதுபித்தல் நடவடிக்கைகள் மேலும் தனியார் நுகர்வுகளை ஊக்குவிக்கும் என்றும், இதனால் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்.பி.ஐ கூறியுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications