இனி உங்களுக்கு வேலை இல்ல! எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்..! ஆனால்..!

இன்றைய உலகம் மனிதாபிமானம், ஈவு, இரக்கம் போன்றவைகளை அதிகம் பார்ப்பதில்லை. குறிப்பாக வேலையில். ஒரு வீட்டில் ஒரே ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால், அவரின் சம்பளத்தை நம்பித் தான் எல்லாமே. சாப்பாடு, துணி மணி, வாடகைக்கு இருக்கும் வீடு என எல்லாமே அவர்கள் சம்பளத்தில் தான்.

ஆனால் ஒருவேளை அவரையே மேலே தலைப்பில் சொன்னது போல, ஒரு நல்ல நாளில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள் என்றால்... என்ன செய்ய..?

கண்ணீர் விடலாம், அடுத்த வேலைக்கு விண்ணப்பித்து தேடலாம். ஆனால் இன்னொரு வேலை கிடைக்கும் வரை செலவுக்கு என்ன செய்ய..? இப்படி சில சமீபத்தைய உதாரணங்கள் இருக்கின்றன.

உதாரணங்கள்

உதாரணங்கள்

இந்த பிரச்னை இன்று இந்திய ஸ்டார்ட் அப் துறையில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. திடீரென சொமேட்டோ சுமார் 500 பேரை வேலையை விட்டு நீக்கியது. ட்ரீ போ என்று அழைக்கப்படும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதம் பேரை அப்படியே கொத்தாக வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ஊழியர்கள் எல்லோருக்கும் மேலே சொன்ன நிலை தான்.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

பொதுவாக நிறுவனங்கள் லே ஆஃப் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஊழியர்களை வெளியில் அனுப்புவதுடன் வேலை முடிந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் சூழ்நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது. லே ஆஃப் செய்த ஊழியர்களை அப்படியே அம்போ என தெருவில் விடாமல், தங்களால் முடிந்த வரை அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் சிலர் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

வெற்றி பெற்றவர்கள்

வெற்றி பெற்றவர்கள்

சமீபத்தில் சொமேட்டோ நிறுவனத்தில் இருந்து லே ஆஃப் செய்யப்பட்டவர்களை சொமேட்டோ நிறுவனம் தன் நண்பர்கள், நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் வழியாக வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள். வெளியேற்றப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் சொமேட்டோ நிர்வாகம் மூலமாகவே பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்களாம்.

ட்ரீ போ

ட்ரீ போ

ட்ரீ போ நிறுவனமும் சொமேட்டோ நிறுவனத்தைப் போல, லே ஆஃப் செய்யப்பட்ட தன் ஊழியர்களில் சுமார் 65 சதவிகிதத்தினருக்கு எப்படியோ நண்பர்கள் மற்றும் தோழமை நிறுவனங்கள் வழியாகப் பேசி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். ட்ரீ போ என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றி லே ஆஃபில் வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ரேசர் பே, பவுன்ஸ், மிந்த்ரா, வோகோ போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

ஸ்டார்ட் அப்

ஸ்டார்ட் அப்

இன்று நம் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே அனுப்புவது எளிது, ஆனால் அவர் தேவை மீண்டும் நம் நிறுவனத்துக்கு வரும் போது அவரை மீண்டும் அழைத்துப் பேசி நம் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வது என்பது சிரமம் ஆகி விடும். பொதுவாக ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் ஆரம்ப காலங்களில், ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் என எல்லோருமே சாதாரணமாக ஊழியர்களுடன் இணைந்து தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருக்கும் என்கிறார் லைட் வெஞ்சர் என்கிற ஃபண்டிங் நிறுவனத்தின் கூட்டாளி சந்தீப் மூர்த்தி.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஸ்டார்ட் அப் நெட்வொர்க் என்பது ஒரு வலுவான உறவில் இயங்கும் அமைப்பு. நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் நல்லதிலும், கெட்டதிலும் பார்த்துக் கொள்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம் என்கிறார் ட்ரீ போ நிறுவனத்தின் இயக்குநர் கருணா கசுபா. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் லே ஆஃப் செய்யப் போகிறார்கள் என்றால், அவர்கள் முதலில் தங்கள் முதலீட்டாளர்களிடம் தான் தான் லே ஆஃப் செய்யப் போகும் ஊழியர்களுக்கு வேறு எங்காவது வேலை கிடைக்குமா..? என்று விசாரிப்பார்கள் எனவும் சொல்லி இருக்கிறார் கருணா.

மனிதம்

மனிதம்

"நீ வேலைக்கு வந்த, இப்ப உனக்கு வேலை இல்ல கெளம்பு" என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லிக் கொண்டிருந்த நிறுவனங்கள், இன்று தன் ஊழியர்களின் வாழ்கையைப் பற்றியும் கவலைப்பட்டு, அடுத்த வேலை வாய்ப்பையும் தேடிக் கொடுப்பதைப் பார்க்கும் போது தான் மனிதம் இன்னும் மலர்வதை உணர முடிகிறது. மனிதம் இன்னும் மலர்ச்சியாக மலரட்டும். ஸ்டார்ட் அப்கள் இன்னும் நிறைய தொடங்கப்படட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+