டெல்லி : ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைகால டிவிடெண்ட் நிதியாக மத்திய அரசு 30,000 கோடியை கேட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும், மாறாக இதை பற்றிய செய்திகள் வெளியானதை பார்த்து தான், தானும் தெரிந்து கொண்டதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை கொடுக்க ரிசர்வ் வங்கி ஒத்துக் கொண்டுள்ள நிலையில், இப்படி சர்ச்சையான கருத்து வெளியாகியுள்ளது.

இந்த நிதி தருவதாக ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டதற்கு, பல தரப்பிலும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவசர கால நிதியாக வைத்திருக்கும் இந்த உபரி நிதியை ரிசர்வ் வங்கி இப்போது செலவளித்து விட்டால், அதை எப்படி அவசரகாலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது.
மேலும் நாட்டின் நிதி நிலையை வலுவாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி தமது கையிருப்பை வலுப்படுத்தி வருகிறது. ஆனால் தேவையான அளவிலை விட அதிகமான உபரி நிதியை ரிசர்வ் வங்கி வசம் வைத்திருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது.
முன்னதாக அரசு பல்வேறு வரிகுறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வேறு வழிகளைத் திட்டமிட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்டாக 30,000 கோடி ரூபாயை மத்திய அரசு கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இது பற்றி நானும் செய்திகளில் பார்த்தேன், எனக்கு தெரிந்து இப்படி ஒரு இடைக்கால நிதியை அரசு கேட்டதாக எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பிமால் ஜலானி தலைமையிலான குழு ஆராய்ச்சி செய்து அரசுக்கு இவ்வளவு நிதியை கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications