இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தரக்கட்டுப்பாட்டால் சிக்கல்.. ஒரே நாளில் ரூ.6300 கோடி அவுட்!

டெல்லி : மருந்து உற்பத்தி நிறுவனமான அரபிந்தோ நிறுவனம், ஒரே நாளில் கிட்டதட்ட 20% வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் மருந்துக் கட்டுபாட்டாளரான US Food and Drug Administration (FDA) இந்த நிறுவனம் தங்களது கண்கானிப்பில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளதையடுத்து இந்த நிறுவனம் இப்படி ஒரு படு வீழ்ச்சியை கண்டுள்ளது.

இது குறித்து இந்த நிறுவனம் பி.எஸ்.இக்கு அளித்துள்ள அறிக்கையில், அமெரிக்கா மருந்துக் கட்டுப்பாட்டாளர், கடந்த செப்டம்பர் 19 - 27, 2019க்கு இடையில் ஆய்வு செய்த அறிக்கையில். தரக்கட்டுப்பாடு குறித்த முழுமையான நடைமுறைகளை பின்பற்ற தவறியாதாகவும் கூறியுள்ளது. ஆனால் அப்படி ஏதும் இல்லை என்றும் அரபிந்தோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது உண்மையல்ல

இது உண்மையல்ல

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரபிந்தோ நிறுவனம், யூனிட் 7-ல் அமெரிக்கா மருந்து கட்டுபாட்டாளரின் ஆய்வு முடிவடைந்துள்ளது. அவர்கள் தரக்கட்டுபாடுடன் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அரபிந்தோ பார்மா பி.எஸ்.இக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. எப்படி இருப்பினும் இப்பிரச்சனையை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பதில் இந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

பங்கு விலை வீழ்ச்சி

பங்கு விலை வீழ்ச்சி

அரபிந்தோ நிறுவனம் இதை மறுத்தாலும், அமெரிக்க கட்டுபாட்டளரின் இந்த அறிக்கையால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 52 வார குறைவினை தொட்டுள்ளது என்றே கூறலாம். அண்மையில் 577 ரூபாய் என்ற விகிதத்தில் வர்த்தகாமாகிய இந்த பங்கின் விலையானது, இன்று மட்டும் சுமார் 20% சரிந்து, 108 ரூபாய் குறைந்து, 458 ரூபாயாக குறைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையிலும் இதே அளவு வீழ்ச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி நடைமுறையில் மாற்றம் இல்லை

உற்பத்தி நடைமுறையில் மாற்றம் இல்லை

எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில், அரபிந்தோ பார்மாவின் தரக்கட்டுப்பாட்டு முறையை கண்கானித்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர், உற்பத்தி கட்டுபாடுகள் மற்றும் செயல்முறைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றி எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக இது பெரிய அளவில் நிம்மதியை தந்தது என்றே கூறலாம்.

மற்ற பார்மா நிறுவனங்களும் வீழ்ச்சி

மற்ற பார்மா நிறுவனங்களும் வீழ்ச்சி

இந்த தரப்பிரச்சனையால் அழுத்தத்தில் இருந்த மற்ற பார்மா பங்குகளும் இன்றும் சற்று வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இதனால் நிஃப்டி இண்டெக்ஸில் பார்மா குறியீடு 3% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள க்ளென் மார்க் நிறுவனமும், அமெரிக்கா சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் இருந்து ஒரு எச்சரிக்கைக் கடிதத்தினை பெற்றதாகவும், இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு விலையும் 52 வார லோவை தொட்டுள்ளது என்றும், தற்போது 285 என்ற அளவில் வர்த்தகமாகியும் வருகிறது. இது இன்று காலை 269.75 என்ற விலை சென்றது குறிப்பிடத்தக்கது. இதே போல் லூபின் பங்கு விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரே நாளில் 108 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது, இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சுமார் 6,300 கோடி ரூபாய்க்கு மேல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, இந்த பதற்றத்தினால் ஒரே நாளில் 6,300 கோடி ரூபாய்க்கும் மேல், தற்போதைய அளவிலிருந்து குறையலாம் என்றும் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+