ஐ.டி துறையில் முன்னணி நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் தனது போட்டியாளர்களை தோற்கடிப்பதற்காக, உலகெங்கிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன் படி இந்தியாவில் கூடுதலாக 2,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ.டி துறையில் குறிப்பாக கிளவுட் கம்பியூட்டிங் துறையில் முன்னேற்றத்தினை காணவும், அதன் போட்டி நிறுவனங்களான அமேசான் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களுடன் போட்டியிடவும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த ஆண்டு நிதி விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளுக்கான ஆரக்கிளின் வணிக மென் பொருளை புதிய அமைப்புகளுக்கு மாற்ற உதவும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சியாட்டில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மற்றும் இந்தியாவில் உள்ள ஆரக்கிளின் மென்பொருள் மேம்பாட்டு மையங்களிலும், புதிய தரவு மையங்களிலும் வேலைகள் சேர்க்கப்படும் என்றும் ஆரக்கிள் கிளவுட் உள் கட்டமைப்பு பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் டான் ஜான்சான் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆரக்கிள் நிறுவனம் 20 கிளவுட் கம்பியூட்டிங் மையங்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது 16 இடங்களில் உள்ளது என்றும், இதில் ஒரு டஜன் கடந்த ஆண்டில் திறக்கப்பட்டது என்றும், சிலி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் புதிய இடங்கள் கட்டப்படும் என்றும் கருதப்படுகிறது.
கடந்த மே 31 வரை, ஆரக்கிள் நிறுவனம் சுமார் 1,36,000 முழு நேர ஊழியர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 18,000 பேர் கிளவுட் கம்பியூட்டிங் சேவைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரக்கிள் அதன் இரண்டாவது தலைமுறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, இப்படியொரு ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
ஒரு புறம் பொருளாதார மந்த நிலையால் பலர் வேலையிழப்புகளை சந்தித்து வந்தாலும், மறுபுறம் இது போன்ற பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது. இது போன்ற பல புதிய வாய்ப்புகளை பயன் படுத்த இத்துறை சார்ந்த, ஊழியர்கள் தங்களின் அறிவைப் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications