டெல்லி : சாம்சங் நிறுவனத்தின் கடந்த மூன்றாவது காலாண்டில் விற்பனை 56% குறைந்து 6.44 பில்லியன் டாலர்களாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இது முந்தைய மதிப்பீட்டை சற்று பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங்கின் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வலுவடைந்துள்ளதாகவும், இதே மெமரி சிப் வணிகத்தில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து, இந்த வணிகத்தை குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாதத்தில் நல்ல விற்பனையை கண்டுள்ள சாம்சங் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் முந்தைய மாதங்களை விட சற்று மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
விற்பனை அதிகரிப்பு
சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முக்கியத்துவத்தால், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதன் இயக்க லாபம் 56% மாக குறைந்து, 6.44 பில்லியன் டாலர்களாக குறையும் என்றும் கருதப்படுகிறது. எனினும் இது முன்னர் கணித்திருந்த விற்பனை குறைப்பை விட இது பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் ஆகஸ்ட் 23ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி 10 தொடரின் விற்பனை அமோகமாக உள்ளது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
வர்த்தகப்போரால் பயன்
தென் கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனம், 5ஜி தொலைபோசிகளிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையை செய்துள்ளது என்றும், இது இந்த நிறுவனத்தின் மிக வேகமான விற்பனை என்றும், ஹூவாயின் மீதான அமெரிக்கா தடையால் இந்த விற்பனை அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா சீனா வர்த்தகபோரால், அமெரிக்கா சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மீது தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சாம்சங் பயனடைந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்துக்கு பயனா?
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஹூவாய் நிறுவனத்தால் ஒரு புறம் சாம்சங் நிறுவனத்துக்கு நன்மையே என்றாலும், மறுபுறம் சாம்சங் நிறுவனத்தின் வருவாய் சீனாவினால் குறைந்து வருகிறது என்பதும் உண்மையே. ஒரு புறம் சீனா தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, பல ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வருகிறது, இது தற்போது சாம்சங் நிறுவனத்துக்கு போட்டியாகவே அமைந்துள்ளது என்றும் கூறலாம். மேலும் சாம்சங் நிறுவனத்தின் மெமரி கார்டுகளை அதிகளவில் வாங்குபவர் ஹூவாய் நிறுவனமே. இந்த நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக சீனா உள்நாட்டு உற்பத்தியில் விரிவாக்கம் செய்து வருவதால் சரிவு என்பது நிச்சயம் தான் என்றாலும், அதிகளவிலான வீழ்ச்சி தற்போதைக்கு குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் வருவாய்
மூன்றாவது காலாண்டில் வருவாய் 5.3% வீழ்ச்சி கண்டு 62 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மொபைல் வணிகமானது, அதன் மெமரி சிப் வணிகத்தினை விட சிறியது என்றும் ஆய்வாளர் பார்க் கூறியுள்ளார். இந்த நிலையில் மொத்த லாபத்தில் 20% ஸ்மார்ட்போன் விற்பனையில் இருந்து பெற்றுள்ளது என்றும், எனினும் சாம்சங் விரைவில் அனைத்து சிக்கல்களையும் சரிசெய்யும் திறன் கொண்டுள்ளது என்றும், விரைவில் மீண்டு வரும் பார்க் கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications