பிப்ரவரி 19, 2019-ல் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited) நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால் இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 71.45 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக சுமார் 8 மாத காலத்துக்குள், இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 138 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.
இந்த பங்கில் ஒருவர் கடந்த பிப்ரவரி 19, 2019-ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால், இன்று அதே நபர் 2.38 லட்சம் ரூபாய் சொத்துக்கு உரிமை கொண்டாடி இருக்கலாம்.

இல்லை எட்டு மாத காலம் எல்லாம் வேலைக்கே ஆகாது எனச் சொல்பவர்களாக இருந்தால், இதோ சில வாரங்களுக்கு முன் வாங்கி இருந்தால் கூட ஒரு நல்ல வருமானத்தைப் பார்த்து இருக்கலாம். சரியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த செப்டம்பர் 05, 2019, வியாழக்கிழமை அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 45 ரூபாய் தான். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று (அக்டோபர் 09, 2019, புதன்கிழமை) விற்று இருந்தால் கூட சுமார் 58 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.
இந்த போன மாத கதை கூட ஒத்து வராதவர்கள், இந்த மாதத்தில் மட்டுமாவது கவனம் செலுத்தி வாங்கி இருந்தால் கூட ஒரு நல்ல லாபம் பார்த்து இருக்கலாம். இதையும் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த அக்டோபர் 01, 2019 அன்று இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகளின் விலை 56.5 ரூபாய் தான். ஆக அன்று வாங்கி இருந்தால் கூட இன்று 71.45 ரூபாய்க்கு விற்று வெளியேறி சுமார் 26 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.
என்ன செய்ய..? நம் ராசி, நமக்கு எப்போதுமே இது போன்ற பங்குகள் ஓரளவுக்கு நன்றாக விலை ஏறிய பின் தான் நமக்குத் தெரிய வருகிறது. இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பட்டியலிடப்பட்டதில் இருந்து தொட்ட உச்சபட்ச விலையே 74.3 ரூபாய் தானாம். ஆக மேற்கொண்டு இந்த பங்கில் முதலீடு செய்வதா வேண்டாமா என்பதை தீர ஆலோசித்து, இந்த நிறுவனத்தைப் பற்றி நன்றாக படித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications