வாஷிங்டன் : சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப் (International Monetary Fund) 2019ல் உலக நாடுகளில் 90% நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையிலேயே தான் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார் இந்த நிதியத்தின் புதிய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா.
தனது முதல் உரையிலேயே உலகம் முழுவதும் தன் பக்கம், திரும்ப வைத்த கிறிஸ்டாலினா, குறிப்பாக இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் மோசமாக பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடகத்திலிருந்தே குறைந்து வரும் விகிதம், இது இன்னும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
சிக்கலான பொருளாதார நிலை
மேலும் இது 2019 - 2020, ஆண்டுகளுக்கான உலக பொருளாதார பார்வை முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு சிக்கலான சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இடையேயான கூட்டு வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக ஜார்ஜீவா இந்த மதிப்பீட்டை மேற்கோண்டார். இந்த நிலையில் இந்த இரு அமைப்புகளும் தங்களின் பொருளாதார கணிப்புகளை உயர மத்திய வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் மந்த நிலை
மேலும் தனது பகுப்பாய்வில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் குறிப்பாக யூரோப்பகுதி போன்ற முன்னேறிய பொருளாதாரங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மென்மையாக்கப்படுவதாக ஜார்ஜூவா வாதிட்டுள்ளார். அதே நேரம் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பிற வளர்ந்து வரும் சந்தைகளில் மந்த நிலை இந்த ஆண்டு இன்னும் அதிகமாக வெளிப்படுகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
பிரச்சனைத் தான் எதிர்கொள்ளும்
இதே சீனாவின் விரைவான வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருவதாக கூறியவர், மேலும் ஏற்கனவே பிரச்சனையை மேற்கொள்ளும் நாடுகள் இன்னும் பிரச்சனையை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது ஐ.எம்.எஃப். மேலும் 40 வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடுகள், இதோடு துணை சஹாரா மற்றும் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்கள் 5 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி எப்படி இருக்கும்?
வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் போன்ற வர்த்தக மோதல்கள் உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என்றும் ஜார்ஜீவா கூறியுள்ளார். இது தவிர நிச்சயமற்ற தன்மையை தூண்டிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றால், நடப்பு ஆண்டில் பொருளாதாரம் மந்தமாகவே இருக்கும் என்றும், மந்த நிலையில் இருக்கும் வர்த்தக துறைகள், தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையில், நடப்பு ஆண்டில் இது மேலும் மந்த நிலைக்கே வழிவகுக்கும் என்றும், இது அடுத்த 2020ம் ஆண்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். .
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications