Recommended Video
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இ.எம்.ஐ வசதியை விரைவில் வழங்க உள்ளது.
இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டு விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நாடு முழுவதும் 1,500 மேற்பட்ட நகரங்களில், 40,000க்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது.
மேலும் இதன் மூலம் 4.5 லட்சம் ரூபாய் வரையில், நீங்கள் இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
யாருக்கு இந்த கார்டு
இந்த டெபிட் கார்டு இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிய 1 மாதத்துக்கு பிறகு உங்களது இ.எம்.ஐ ஆரம்பிக்கும் என்றும், உங்களது வங்கி கணக்கில் முறையான நிதி இருப்பு மற்றும் பணபரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த கார்டினை பெற நீங்கள் எந்த ஆவணமும் தரவேண்டியதில்லை என்றும், நீங்கள் எந்த வங்கிக் கிளையையும் அணுக வேண்டியது இல்லை என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.
இ.எம்.ஐ டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை?
இந்த இ.எம்.ஐ கார்டுகளை பெற எந்த வித கட்டணமும் கிடையாது. குறிப்பாக செயல்பாட்டுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. மேலும் டாக்மென்டேஷன் கட்டணமும் இல்லை. இது எந்த வித கட்டணமும் செலுத்தாமல் நாம் பொருட்களை வாங்க இந்த கார்டுகள் ஏதுவாக அமையும் என்றும், இது பேப்பர்லெஸ் கடன்களாக இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த கார்டில் என்ன சலுகை?
இந்த இ.எம்.ஐ கார்டாக அறிமுகப்படுத்தப்படும் இந்த டெபிட் கார்டை வைத்து, குறைந்த பட்சம் 6 மாதம் முதல், 18 மாதம் வரை தவணைகளைக் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இதற்காக தனியாக வங்கியை தொடர்பு கொள்ள தேவையில்லை என்றும், பொருட்களை தேர்வு செய்யும் போது ஜீரோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்சனை க்ளிக் செய்தால் போதும், உங்களது பரிவர்த்தனை இதன் மூலம் நடந்து முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கிரெடிட் ஸ்கோர் வேண்டும்
இந்த கார்டுகளை பெற வங்கிக் கணக்கில் நல்ல பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும், மேலும் உங்களது கிரெடிட் ஸ்கோர் தேவையான அளவு இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எஸ்.பி.ஐ அக்கவுண்ட் கோல்டர்ஸ் நீங்கள் இதற்கு தகுதியானவர் தான என்பதை தெரிந்து கொள்ள DCEMI என டைப் செய்து, 567676 என்ற எண்ணிற்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய வங்கி
சொத்துக்கள், வைப்புத் தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை பொறுத்தவரை, எஸ்.பி.ஐ இந்தியாவில் மிகப்பெரிய வணிக வங்கியாகும். இது இந்தியாவில் 22,088 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியாக செயல்பட்டு வரும் இவ்வங்கி, அவ்வப்போது பற்பல சலுகைகளை வழங்கி வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பண்டிகை காலத்துக்கு முன்னதாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு இது தான் தீபாவளி போனஸ் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications