9 மாதங்களில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை.. நானோவுக்கு நேர்ந்த பரிதாபம்!

Recommended Video

பாதாளத்திற்கு சென்ற உற்பத்தி.. நானோ காரின் கதை முடிந்ததா? - வீடியோ

டெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி என்று கூறப்பட்டாலும், பயணிகள் வாகன விற்பனை மிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக சிறிய ரக கார் விற்பனை மிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் முதல் ஒன்பது மாதங்களில் ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

அப்படி என்ன கார் என்று கேட்கிறீர்களா? அது தான் நானோ கார்.

ஒரு கார் மட்டுமே விற்பனை

ஒரு கார் மட்டுமே விற்பனை

நடப்பு 2019ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த ரக கார்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், அதுவும் உள்நாட்டு சந்தையில் ஒரே ஒரு காரை மட்டும் விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். எனினும் இதில் வேடிக்கை என்னவெனில் இந்த நிறுவனம் இந்த ரக கார்களை நிறுத்துவதாக, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கவில்லை என்பது தான். எனினும் இதன் விற்பனையானது ஒன்றே ஒன்று தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை இது தான்.

நானோவின் எதிர்காலம்

நானோவின் எதிர்காலம்

நானோவின் எதிர்காலம் குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒரு காரின் உற்பத்தித் திட்டமிடல் என்பது அதன் தேவை, சிஸ்டம் இன்வென்ட்ரி, எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவகையில் திட்டமிடுவதாகும். எப்படி எனினும் இந்த நானோ காரானது பி.எஸ் 6 விதிமுறைகளை பூர்த்தி செய்யாது என்பதையும் இந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிய ரக கார் உற்பத்தி இல்லை

சிறிய ரக கார் உற்பத்தி இல்லை

இந்த நிறுவனம் இந்திய சந்தைகளுக்கு அளித்த ஒழுங்கு முறை அறிக்கையின் படி, இந்த ஆண்டு செப்டம்பரில் உள்நாட்டு சந்தையில் நானோ விற்பனை எதுவும் இல்லை என்றும், மேலும் டாடா மோட்டார்ஸ் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாகவும் இந்த காரை உற்பத்தி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. கடந்த ஜனவரி 2008ல் நானோ நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளிப்பட்ட நிலையில், அதன் விற்பனையானது தொடர்ந்து பல ஆண்டுகளாக, படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தகக்கது.

நானோ மாடல் நிறுத்தமா?

நானோ மாடல் நிறுத்தமா?

பி.எஸ் 6 விதிகளின் படி, பிற பாதுக்காப்பு விதிமுறைகளையும் பின்பற்றாத நிலையில், இதன் உற்பத்தியும் முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளது. ஆக இந்த நானோ கார் ஏப்ரல் 2020 முதல் நிறுத்தப்படலாம் என்றும், டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸூக்கு பெருத்த நஷ்டத்தினை உருவாக்கும் ஒரு மாதிரியாக இந்த கார் அமைந்துள்ளது என்றும், இந்த நானோவால் டாடா மோட்டார்ஸூக்கு சுமார் 1,000 கோடி நஷ்டம் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+