அதிரடியான ஆஃபர்கள்.. 90% வரை தள்ளுபடி.. மீண்டும் பிளிப்கார்டில் 5 நாட்கள் சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
BIG BILLION SALE | Great Indian Indian Festival | அமேசான், பிளிப்கார்ட்டில் நம்ப முடியாத சலுகைகள்

பிளிப்கார்ட் என்றாலே சலுகை, தள்ளுபடி என்றாகி விட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆஃபர் மழையினை பெய்ய ஆயத்தமாகி வருகிறது பிளிப்கார்ட்.

அதுவும் 90% வரை தள்ளுபடியில்! ஏற்கனவே கடந்த வாராத்தில் பிக் பில்லியன் டேஸ் 2019லியே விற்பனையை களைகட்டியது, 63% வளர்ச்சி கண்டுள்ளது என்றும் ஒர் அறிக்கையில் பிளிக்கார்ட் கூறியிருந்தது.

இந்த நிலையில், அந்த பிக் பில்லியன் டேவை விட இந்த விற்பனையில் சலுகை இன்னும் அதிகமாக இருக்கும், தள்ளுபடிகள் நிறைய இருக்கும் என்ற நிலையில் இந்த முறைறையும் பல ஆயிரம் கோடிகளில் புரள தயாராகி விட்டது பிளிப்கார்ட்.

எப்போது ஆரம்பம்
 

எப்போது ஆரம்பம்

எப்போதும் போல பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக அக்டோபர் 12 அன்றே ஆரம்பமாகிறது. இதே மற்ற வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 13 அன்று ஆரம்பமாக உள்ளது இந்த தீபாவளி சலுகை விற்பனை. இது 5 நாட்கள் தொடரும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமேசானிலும் இதே நேரத்தில் தான் இந்த தீபாவளி விற்பனை ஆரம்பமாகவுள்ளது.

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளுக்கு சிறப்பு சலுகை

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளுக்கு சிறப்பு சலுகை

இந்த பிளிப்கார்டு தீபாவளி தமாகாவில் எஸ்.பி.ஐயின் கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி 10% தள்ளுபடி உண்டாம். இதே பிளிப்கார்டின் பிளஸ் மெம்பர்களுக்கு இந்த சலுகையானது அக்டோபர் 11, இரவு 8 மணி முதல் இந்த சலுகையை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மற்றவர்கள் அக்டோபர் 12 மிட்நைட்டில் இருந்தே இந்த சலுகையை பெற முடியும் என்றும் பிளிப்கார்டு கூறியுள்ளது.

ஸ்மார்ட்போன் தள்ளுபடி

ஸ்மார்ட்போன் தள்ளுபடி

ஸ்மார்ட்போன் தள்ளுபடி குறித்த சலுகையினை இன்னும் பிளிப்கார்ட் வெளியிடவில்லை. எனினும் சிறந்த பிராண்டுகளின், ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய அளவில் தள்ளுபடி இருக்கும் என்றும், மீண்டும் திரும்ப பெறுதல் உத்தரவாதம், முழுமையான மொபைல் பாதுகாப்பு என அதிரடியான சலுகையை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பிளிப்கார்டு.

சலுகையுடன் நோ காஸ்ட் இ.எம்.ஐ
 

சலுகையுடன் நோ காஸ்ட் இ.எம்.ஐ

பிளிப்கார்டின் இந்த அதிரடியான சலுகையுடன் நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆஃபரும் உண்டு எனவும், இது தவிர சிறந்த எக்சேன்ஜ் சலுகைகளும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர டிவி மற்றும் மற்ற பொருட்கள் 75% சலுகையுடன், 50,000 மேற்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே எலக்ட்ரானிக் சம்பந்தமான ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், ஹெட்போன்கள், டி.எஸ்.எல்.ஆர் உள்ளிட்ட பல பொருட்கள் 90% சலுகையுடன் எதிர்பார்க்கலாம் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

90% தள்ளுபடி

90% தள்ளுபடி

இது தவிர பிளிப்கார்ட் பிராண்டுகளும் 90% வரையிலான தள்ளுபடி வரையிலும் கிடைக்கும் என்றும், இது தவிர மொபைல்போன்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் தமாகா டீல்ஸ் என்ற பெயரில் காலை 8 மணி, 12 மணி, மற்றும் மாலை 4 மணி என சிறப்பு சலுகைகளை வாரி வழங்குகிறது பிளிப்கார்ட். மேலும் விற்பனை நன்கு அதிகரிக்கும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு சலுகைகளை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சிறு நகரங்களில் வரவேற்பு

சிறு நகரங்களில் வரவேற்பு

பிக் பில்லியன் டே விற்பனையிலேயே நல்ல விற்பனை இருந்ததாகவும், இந்த நிலையில் இந்த தீபாவளி விற்பனையானது எதிர்பாராத அளவில் இருக்கும் என்றும், சராசரி நேரங்களை விட இந்த நேரத்தில் விற்பனையானது இரு மடங்காக இருந்தது என்றும், குறிப்பாக டயர் 2, மற்றும் 3 நகரங்களில் நல்ல விற்பனை இருந்ததாகவும், பண்டிகைகால மொத்த விற்பனையில் 70 - 75% பிளிப்கார்ட் விற்பனையாக இருக்கலாம் என்றும், புதிய வாடிக்கையாளர் வளர்ச்சி 50 - 60% இருந்தது என்றும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart announces Big Diwali sale will give up to 90% offer

Flipkart Big Diwali sale will give up to 90% offer on flipkart brands, and some electronic items also will sale up to 90% offer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X