மும்பை : இன்றைய காலத்தில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வதாரமாக கொண்டுள்ளது வங்கி வைப்பு நிதியையே. அதில் வரும் வட்டி வருவாயே பலருக்கு அடிப்படை ஆதாராமாக உள்ளது.
இந்த நிலையில் எஸ்பிஐ கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ள நிலையில், இதை ஈடுகட்ட வங்கியில் வைப்பு நிதி வைத்திருக்கும் இருப்பு தொகைக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது.
ஒரு புறம் கடன்களுக்கான வட்டி குறைந்துள்ளது என்றாலும், மறுபுறம் சுமார் 4 கோடி பேர், தங்களது வைப்புத் தொகையாக 14 லட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைத்துள்ளனர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி வருவாய் குறைந்துள்ளது கவனிக்கதக்கது.
எவ்வளவு வட்டி குறைப்பு?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் சேமிப்பு கணக்கில் ஒர் லட்சம் ரூபாய் வரை வைத்திருக்கும் டெபாசிட் தொகைக்கு, வட்டி விகிதத்தை 3.25%மாக குறைத்துள்ளது. இது முன்னர் 3.50%மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள், 7 முதல் 45 நாட்களுக்கு 5%மாகவும், 46 - 179 நாட்கள் 6%மாகவும், இதே 180 - 210 நாட்களுக்கு 6.3%மாகவும், 211 - 1 வருடத்துள் இருக்கும் வைப்பு தொகைக்கு 6.3%மாகவும், இதே 1 - 2 வருடத்துக்குள் 6.9%மாகவும், 2 - 3 வருடத்துக்குள் 6.75%மாகவும், 3-5 வருடத்துக்குள் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கு 6.75%மாகவும், இதே 5 - 10 வருடத்துக்குள் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கு 6.75%மாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
தாக்கம் இல்லை
இது குறித்து நிபுணர்கள் கூறியுள்ள கருத்தில், இந்த வட்டி குறைப்பினால் தாக்கம் இருக்கும், ஆனால் இந்த தாக்கம் பெயரளவில் மட்டும் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் டெபாசிட் தாரர்களுக்கு கூட வரி விதிக்கப்படுகிறது. ஆனால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பிரதமமந்திரி வய வந்தனா திட்டங்களில் கூட வரி விதிக்கப்படுகின்றன. ஆனால் SCSS திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் வரை வைப்பு நிதி வைப்பவர்களுக்கு வரி சலுகை உண்டு. ஏனெனில் மூத்த குடிமக்களுக்கு வேறு வருமானம் இல்லை என்ற பெயரில் அவர்களுக்கு வரி கிடையாது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பினால் மொத்த தாக்கம் என்பது சிறிய அளவில் தான் இருக்கும் என்றும் எஸ்.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.
வருவாய் சற்று குறையும்
60 வயதுக்கு மேல் உள்ள ஒரு மூத்த குடிமகன் 15 லட்சம் ரூபாய்க்குள் வைப்பு நிதியை senior citizen savings schemeன் அடிப்படையில் வரி சலுகை உண்டு என்றும் எஸ்.பி.ஐ கூறியிருந்தாலும், மறுபுறம் எஸ்பிஐயின் இந்த வைப்பு நிதி வட்டி விகித குறைப்பால், ஒருவர் 50 லட்சம் வைத்துள்ளார் என்றால் அவரது வருவாயில் 5000 ரூபாய் குறையும் என்றும் கூறப்படுகிறது.
மனக்கசப்புகள் அதிகமாகும்
எஸ்பிஐயின் அறிக்கையின் படி, தற்போது எஸ்பிஐயில் தற்போது சுமார் 4.1 கோடி பேர், தங்களது வைப்புத் தொகையாக 14 லட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைத்துள்ளனர். இவர்களின் அனைவரின் வைப்பு நிதிகளுக்கும் விரைவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும், இந்த வட்டி குறைப்பானது அனைத்து வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் இடையே ஒரு மனக்கசப்பை உருவாக்கும் என்றும், ஏனெனில் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி வருவாய் குறையும் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.
முதலீட்டை மாற்றலாம்
எஸ்பிஐயின் இந்த வட்டி குறைப்பால், மூத்த குடிமக்கள் இடையே இது பெரிய இடைவெளியை உருவாக்கலாம் என்றும், இது பெரும்பாலான வைப்பு நிதிகள் வெளியேற காரணமாக இது அமையலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஒரு புறம் பரஸ்பர நிதிகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவ்வாறு முதலீடு செய்யும் போது பாதுகாப்பு மற்றும் வருவாய், பணப்புழக்கம் இவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
சிக்கலில் மூத்த குடிமக்கள்
ஒரு புறம் இந்த வட்டி குறைப்பினால் பெரிய தாக்கம் இல்லை என்று சில அறிக்கைகள் கூறினாலும், இந்த வட்டி விகித வருவாயை நம்பியுள்ள மூத்த குடிமக்களை பெரிய சிக்கலைத் நோக்கித தள்ளுகின்றன. ஆக வங்கியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பொருளாதாரத்துடன் சேர்த்து மூத்த குடிமக்களின் நலன்களையும் பாதுக்காக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications