ரயில்வே தனியார்மயம்.. பரிசீலனை குழு அமைக்க அரசு திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரயில்வே துறையில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில்வே ஸ்டேஷன்கள் தனியார் மயமாக்குவது குறித்த அறிக்கையை தயார் செய்வதற்காக குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த், விகே யாதவுக்கு எழுதிய கடிதத்தில், ரயில்வே வாரிய செயல்முறையை இயக்க ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தனியார்மயம்.. பரிசீலனை குழு அமைக்க  அரசு திட்டம்!

இந்த குழுவில் அமிதாப் காந்த் மற்றும் விகே யாதவ்வை தவிர, செயலாளரும், பொருளாதார விவகாராங்கள் துறை மற்றும் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கூறியுள்ள அமிதாப் காந்த், இது குறித்து நான் ரயில்வே அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டேன். அதில் குறைந்தது 50 நிலையங்களுக்காவது முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பி.டி.ஐக்கு அளித்த அறிக்கையில் காந்த் கூறியுள்ளார்.

பயணிகள் ரயிலை தனியார் மயமாக்க ஆப்ரேட்டர்களை அழைத்து வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்பதையும், இதில் முதல் கட்டமாக 150 ரயில்களை தனியார் மயமாக்குதல் பற்றி ஆலோசித்து வருவதாகவும், இதை ஏற்கனவே கூறியது தான் என்றும், இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றும் பி.டி.ஐக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் இந்த பரிந்துரைக் குழுவில் பொறியியல் ரயில்வே வாரியமும் உறுப்பினராக சேர வேண்டும் என்றும் காந்த் கூறியுள்ளார்.

அக்டோபர் 4 முதல் லக்னோ - டெல்லி வரையிலான தேஜஸ் ரயில் ரயில்வே அல்லாத ஆபரேட்டரும், துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முதல் தனியார் ரயில் இயக்கப்பட்டுள்ளது முதல் அனுபவமாகும்.

மேலும் ஐ..ஆர்.சி.டி.சிக்கு விடப்பட்ட இந்த தனியார் ரயிலில் பயணிகளுக்கு உணவு, 25 லட்சம் ரூபாய் வரை இலவச இன்சூரன்ஸ் காப்பீடு, தாமதம் ஏற்பட்டால் அதற்கு ஏற்றாற்போல் இழப்பீடு என பல சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் அமிதாப் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt to planning constitute panel to privatize to train and railway stations

Govt to planning constitute panel to privatise to train and railway stations, there is in Yadav and amitabh Kant, also comprise secretary, department of economic affairs and secretary, ministry of housing and urban affairs in that panel.
Story first published: Thursday, October 10, 2019, 19:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X