இந்த 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கீங்களா.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

டெல்லி : பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25% வரை குறைத்துள்ளன.

இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 5-வது முறையாக கடந்த வாரம் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.

இதனால் வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடங்களுக்கான வட்டி விகிதம் 5.4 சதவிகிதமாக இருந்த நிலையில், 5.15 சதவிகிதமாக குறைந்தது. இதனால் வங்கிகள் மக்களுக்கு அளித்து வரும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன.

வட்டி குறையும்

வட்டி குறையும்

இந்த நிலையில் பல வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன்களை ரெப்போ ரேட் அடிப்படையிலான கடன்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதனால் புதியதாக கடன் வாங்குபவர்கள், பழைய கடன்கள் என அனைத்தும் எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால் இந்த ஐந்து வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு வட்டி விகிதம் குறையும் என்றும், மாத மாதம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ தொகை குறையும் என்றும் கூறப்படுகிறது.

எந்தெந்த வங்கிகள்

எந்தெந்த வங்கிகள்

பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வட்டி குறைப்பை தொடர்ந்து, இந்த பொதுத்துறை வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு வட்டி குறைப்பு

எவ்வளவு வட்டி குறைப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரெபோ விகிதம் குறைந்ததையடுத்து, சில்லறை பிரிவு மற்றும் மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பொருந்தக் கூடிய வட்டி விகிதத்தை 8%மாக குறைத்துள்ளது. இது நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே பேங்க் ஆப் இந்தியா ஓவர் நைட் எம்சிஎல்ஆர் 15 அடிப்படை புள்ளிகளும், இதே ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த விகிதமானது அக்டோபர் 10 முதலே நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் எவ்வளவு வட்டி விகிதம்

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் எவ்வளவு வட்டி விகிதம்

புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மஹாரஷ்டிரா வங்கி, தனது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் 0.25 அடிப்படை விகிதங்கள் குறைக்கப்பட்டு 8.20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் 8 முதல் நடைமுறையில் உள்ளது. எனினும் ஆண்டுக்கான அடிப்படை விகிதம் 9.50% மாறாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பேங்க் ஆப் மஹாராஷ்டிரா கூறியுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ன சொல்கிறது?

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ன சொல்கிறது?

இதே திருவிழா பருவத்தைக் கருத்தில் கொண்டு, சில்லறை மற்றும் மைக்ரோ சிறு நிறுவனங்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காக, அடிப்படை கடன் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது என்றும், இது கடந்த அக்டோபர் 10 முதலே நடைமுறையில் உள்ளது என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன் விகிதம் 8%மாகவும், இதே எம்.எஸ்.இ கடன் விகிதம் 8.95 - 9.50% மாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓரியண்டல் பேங்க் விகிதம்

ஓரியண்டல் பேங்க் விகிதம்

ஓரியண்டல் பேங்க் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் 0.5% மட்டுமே மாற்றம் செய்துள்ளது. இதுவும் அக்டோபர் 10 முதலே நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவோடு சேர்த்து 6 பொதுத்துறை வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. இது திருவிழா பருவத்தில் ,மிகப்பெரிய மக்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது பழைய கடன்களுக்கு மட்டும் அல்லாது, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+