இந்தியாவின் முதல் பணக்காரர் யார் தெரியுமா.. வழக்கம் போல இவர் தான்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : 2019ம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம் போல ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியே மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார்.

இதோடு முதல் முறையோ இரண்டாவது முறையோ அல்ல, 12 ஆவது முறையாக இவர் தான் முதல் இடத்தில் இருந்து வருகிறார். ஜியோவின் வளர்ச்சிக்குப் பின்னர் இவரின் சொத்து மதிப்புகள் நன்கு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 51.4 பில்லியன் டாலாராக அதிகரித்துள்ளாதாக கூறப்படுகிறது.

ஜியோ தான் மிகப் பெரிய சொத்து

ஜியோ தான் மிகப் பெரிய சொத்து

இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் சவாலான வருடமாகவே இருந்த போதிலும், மீண்டும், முகேஷ் அம்பானியே முதலிடத்தை தக்க வைத்திருப்பது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜியோ மூலம் 4.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை சேர்த்துள்ளார் என்றும் கூற்ப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மூன்று வருடம் மட்டுமே ஆனா, தொலைத் தொடர்பு துறையை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 340 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்த சொத்து மதிப்பு குறைந்தது

மொத்த சொத்து மதிப்பு குறைந்தது

மொதுவான பொருளாதாரத்தின் பிரச்சனையினால் 2019 ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர் பட்டியியலில் உள்ள பணக்கார அதிபர்களின் மொத்த சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டை விட 8% வீழ்ச்ச்சியடைந்து, 452 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் முதல் நூறு பணக்காரர்களில் பலரும் தங்களது நிகர மதிப்பில் சரிவைக் கண்டுள்ளனர் என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி

இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி

உளகட்டமைப்பு அதிபரான கௌதம் அதானி 8 வது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இவரின் 9 வருட காத்திருப்புக்கு பின்னர் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தில் இவர் பெற்ற அனுமதியும், இது தவிர சில விமான நிலையங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் இவருக்கு நன்றாக கைகொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த இடத்தில் உள்ள பணக்காரர்கள்

அடுத்தடுத்த இடத்தில் உள்ள பணக்காரர்கள்

அம்பானி மற்றும் அதானிக்கு அடுத்து ஹிந்துஜா சகோதரர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும், இவர்களின் சொத்து மதிப்பு 15.6 பில்லியன் டாலர் என்றும், பல்லோஞ்சி மிஸ்திரி 15 பில்லியன் டாலர் மதிப்பிலும், உதய் கோடக் 14.8 பில்லியன் டாலர் மதிப்புடனும், மேலும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 6 பேர் சேர்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் 41 வது இடத்தில் உள்ள சிங் குடும்பம் 3.18 பில்லியன் டாலர் மதிப்புடனும், சம்பிரதா சிங்கின் சொத்தை வாரிசாக பெற்ற பைஜூ ரவீந்திரன் 72 இடத்தில் 1.91 பில்லியன் டாலருடனும் உள்ளார்.

இவர் தான் இளம் பணக்காரர்

இவர் தான் இளம் பணக்காரர்

வேகமாக வளர்ந்து வரும் எடெக் யூனிகார்ன் நிறுவனத்தின் நிறுவனர் மகேந்திர பிரசாத், 38 வயதான இளம் பணக்காரரான இவர் 81-வது இடத்தில் 1.77 பில்லியன் டாலர்களுடனும், மனோகர் லால் மற்றும் மதுசூதன் அகர்வால் 1.7 பில்லியன் டாலர்களுடனும், ராஜேஷ் மெஹ்ரா 95 இடத்தில் 1.5 பில்லியன் டாலர் மதிப்புடனும், அஸ்டரல் பாலிடெக்னிக் நிறுவனத்தின் பொறியாளர் சந்தீப் 98 வது இடத்தில் 1.45 பில்லியன் டாலர்களுடனும் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forbes India Rich List 2019: Mukesh ambani in first place comes again, his wealth increased to $51.4 billion this year

Mukesh ambani in first place comes again, his wealth increased to $51.4 billion this year, and second place is Gautam Adani, his net wealth worth jumped $15.7 billion
Story first published: Friday, October 11, 2019, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X