டெல்லி: இந்திய தொழிற்துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் 2019-ம் மாதத்துக்கு இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2019-க்கான தொழிற்துறை உற்பத்தி அதற்கு முந்தைய ஆகஸ்ட் 2018-ம் ஆண்டை விட -1.1 சதவிகிதம் என சரிவைக் கண்டு இருக்கிறது.
கடந்த ஜூலை 2019-ல் தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த ஜூலை 2018-ஐ விட 4.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த தொழில் துறை உற்பத்திக் கணக்கு நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இப்படி இந்திய தொழில் துறை உற்பத்தியும் தொடர்ந்து குறைந்து இருப்பதால், மேலும் ஆர்பிஐ தன்னுடைய வட்டி விகிதங்களை ஆறாவது முறையாக குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சில தரப்பினர்கள்.

உற்பத்தி, மின்சாரம், கேப்பிட்டல் கூட்ஸ், கட்டுமானப் பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் என பல முக்கிய துறைகள் பலத்த சரிவைச் சந்தித்து இருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 2018-ஐ விட இந்த ஆகஸ்ட் 2019-ல் உற்பத்தித் துறை -1.2 சதவிகிதம், மின்சாரம் -0.9 %,கேப்பிட்டல் கூட்ஸ் -21.0 %, கட்டுமானப் பொருட்கள் -4.5 %, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் -9.1 % என சரிவைச் சந்தித்து இருக்கிறது.
இந்திய தொழில் துறை உற்பத்தியில் சில துறைகள் வளர்ச்சியும் கண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2018-ஐ விட இந்த ஆகஸ்ட் 2019-ல் சுரங்கத் துறை 0.1 %, பிரைமரி பொருட்கள் 1.1 %, இடைநிலைப் பொருட்கள் 7.0 %, கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் 4.1 %, என சில துறைகள் வளர்ச்சியும் கண்டிருக்கிறதாம்.
இன்று தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் விற்பனை விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டது. அதிலும், இந்திய ஆட்டோமொபைல் விற்பனை கடந்த செப்டம்பர் 2018-ஐ காட்டிலும் செப்டம்பர் 2019-ல் சுமார் 22 சதவிகிதம் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வரும் தரவுகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது. ஆனால் நம் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது, எடுத்துக் கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications