ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கு வட்டியை குறைத்த நிலையில் வாடிக்கையாளர்கள் மிக சந்தோஷமாக இருந்தார்கள்.
இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, முன்னதாக எஸ்.பி.ஐ வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) முற்றிலும் இலவசம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த சலுகையை வாபஸ் பெற்று கொள்ளவதாகவும், இனி வங்கி வீட்டுக்கடன் திட்டங்களுக்கு தனியே செயலாக்கக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
வட்டி வருவாய் குறையும் என்பதால் வந்த வினை
ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் கடன் திட்டங்கள் மீதான வட்டியும் குறைகிறது. இதன் விளைவாக வங்கிகளுக்கு கடன் மீதான வட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் என்ற நிலையில் எஸ்பிஐ இப்படியொரு அதிரடியான முடிவை எடுத்துள்து என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே வட்டி குறைப்பை ஈடுகட்ட எஸ்பிஐ செயலாக்கக் கட்டணத்தை திரும்ப பெறும் முடிவை எடுத்துள்ளது.
எஸ்பிஐ செயலாக்க கட்டண சலுகை வாபஸ்
இது குறித்து எஸ்பிஐ தனது கிளைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, வரும் டிசம்பர் 31, 2019ம் தேதி வரை செயலாக்கக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்வதாகக் எஸ்பிஐ கூறிய அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை அளிக்கப்படும் வீட்டுக் கடன்களுக்கு செயலாக்கக் கட்டண ரத்து பொருந்தும் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதற்கு மேல் கடன் வாங்கினால் இதை கொடுக்கனும்
இந்த செயலாக்கக் கட்டணம் 0.4 சதவிகிதமாக இருக்கும் என்றும், இது வீட்டுக் கடன் தொகைக்கு ஏற்ப 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும், இதே அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய் பெறப்படும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் இனி அக்டோபர் 15க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு ,கடன் சுமையில் இதுவும் சேர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
வருவாய் குறைவு
கடந்த ஜூலை 1, 2019 முதல் எஸ்பிஐ தனது கடன் திட்டங்களை ரெபோ வட்டி விகிதத்தோடு இணைத்தது. இதற்கு முன்பும் எஸ்பிஐ இருப்பதிலேயே குறைவான வட்டியை அளித்து வந்தது. இந்த நிலையில் ஆர்.பி,ஐ ரெபோ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட பின் வட்டி விகிதம் இன்னும் குறைந்துள்ளது. இதனால் வங்கிக்கு இதன் மூலம் கிடைத்த வருவாய் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது எனவும் SBI வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications