டெல்லி: BSNL நிறுவனத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை திட்டவட்டமாகச் சொல்லி இருக்கிறார் டெலிகாம் செயலர் அன்சூ பிரகாஷ்.
அதே நேரத்தில், அரசு BSNL நிறுவனத்தை இழுத்து மூடுவது தொடர்பாக யோசித்துக் கொண்டு இருக்கிறது என்கிற செய்தியும் தவறானது.
அப்படி அரசுக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார் மத்திய டெலிகாம் துறையின் செயலர் அன்சு பிரகாஷ்.
பரிந்துரை
சமீபத்தில் தான், BSNL மற்றும் எம் டி என் எல் நிறுவனத்தை மூட, மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து இருப்பதாகச் செய்திகள் வெளியானது. அந்த செய்தியை நிதி அமைச்சகம் இன்று வரை மறுக்கவில்லை. ஆனால் BSNL நிறுவனம் உடனடியாக முன் வந்து தாங்கள் இந்தியாவில் மேற்கொண்டு டெலிகாம் சேவைகளை வழக்கம் போல வழங்குவோம் எனச் சொல்லி இருந்தார்கள்.
பி எஸ் என் எல்
BSNL நிறுவனமே முன் வந்து சொன்ன பின் தான், இப்போது மத்திய டெலிகாம் துறைச் செயலர் அன்சு பிரகாஷ் முன் வந்து, அரசு, BSNL நிறுவனத்தை மூடாது, மூடுவதைக் குறித்து யோசிக்கவும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார். முன்பு வெளியான செய்திகளில் பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் மூட பரிந்துரை கொடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது டெலிகாம் செயலர் பதிலில் எம் டி என் எல் நிறுவனத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லவில்லை.
நிறுவனத்துக்கு ஊக்குவிப்பு
சரி, செயலர் அன்சு பிரகாஷ்-ன் செய்திக்கு வருவோம். அரசு BSNL நிறுவனத்தை மூடாது என அழுத்திச் சொன்ன செயலர் அன்சு பிரகாஷ், மேற்கொண்டு BSNL நிறுவனத்தை வளர்க்கவும் அரசு திட்டம் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். என்ன திட்டம்..? எப்படியாவது இருக்கும் ஊழியர்களை அப்படியே பாதுகாத்துக் கொள்வார்களா..? என்று பார்த்தால் அது தான் இல்லை.
திட்டம்
BSNL நிறுவன ஊழியர்களுக்கு தகுந்த விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, BSNL நிறுவனத்துக்குத் தேவையான நான்காம் தலைமுறை அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது, BSNL வைத்திருக்கும் சொத்துக்களை விற்று பி எஸ் என் எல் நிறுவனத்துக்குத் தேவையான பணத்தை திரட்டி, BSNL நிறுவனத்தை செயல்பட வைப்பது தொடர்பாக யோசித்து திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
நிலைமை மோசம்
கடந்த 2009 - 10 காலத்தில் இருந்து BSNL நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு மாதம் கூட ஊழியர்கள் சம்பள விஷயத்தில் விளையாடியது இல்லை. பி எஸ் என் எல் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த பிப்ரவரி 2019-ல் தான், தன்னுடைய ஊழியர்களுக்கே ஒழுங்காக சம்பளத்தைப் போட முடியாமல் திணறியது. அப்போதே அரசுக்கு BSNL நிறுவனம் மூலம் வந்த அழுத்தத்தைப் புரிந்து கொண்டது. அன்றில் இருந்து இன்று வரை எப்போதும் விருப்ப ஓய்வு, வி ஆர் எஸ் பேக்கேஜ் கொடுப்பது, BSNL நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது பற்றி செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இதுவரை தீர்வு எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications