இந்திய அரசாங்கத்துக்கே வங்கியாக இருந்து நிதி நிலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வது மத்திய ரிசர்வ் வங்கி தான்.
இந்த வங்கி தான் இந்தியாவின் அந்நிய செலாவணிகளையும் பார்த்துக் கொள்கிறார்கள்.
பொதுவாகவே ரகுராம் ராஜன் காலத்தில் இருந்து இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserve) சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் தான் இருக்கும்.
வரலாற்று உச்சம்
ஆனால் இப்போது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் அந்நிய செலாவணி 437.83 பில்லியன் டாலரைத் தொட்டு இருப்பதாக லைவ் மிண்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த தரவுகள் கடந்த அக்டோபர் 04, 2019 அன்றைக்கான மத்திய ரிசர்வ் வங்கி கையிருப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. சரி எதில் எல்லாம் நம் மத்திய ரிசர்வ் வங்கி முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்..?
கரன்ஸி & தங்கம்
அந்நிய செலாவணியில் என்ன எல்லாம் இருக்கும்..? வாருங்கள் பார்த்துவிடுவோம். தற்போது இந்தியா தன் கைவசம் வைத்திருக்கும் அந்நிய செலாவணியில் 405 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு கரன்ஸிகளாகத் தான் வைத்து இருக்கிறார்கள். அதற்குப் பின் அதிகப்படியாக தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள். தங்கத்தில் மட்டும் சுமார் 27.17 பில்லியன் டாலர் அளவுக்கு நம் மத்திய ரிசர்வ் வங்கி முதலீடு செய்து வைத்திருக்கிறார்களாம்.
98 சதவிகிதமா..?
மத்திய ரிசர்வ் வங்கி நிர்வகித்து வரும், இந்தியாவின் அந்நிய செலாவணி கணக்கில் வெளிநாட்டு கரன்ஸியும், தங்கமும் தான் பெரும்பாலான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதைய ஒட்டு மொத்த 437 பில்லியன் டாலரிலேயே 432 பில்லியன் டாலர் இந்த இரண்டில் மட்டுமே முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள். இதை சதவிகிதம் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், சுமார் 98 சதவிகிதம் வருகிறது.
மீதி
இந்த 98 சதவிகித சொத்துக்கள் போக மீதம் இருக்கும் கொசுறுகள் SDRs - Special drawing rights என்று சொல்லப்படும் சிறப்பு முதலீட்டில் சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்து வைத்து இருக்கிறார்கள். மிச்சத் தொகையை சர்வதேச பன்னாட்டு நிதியமான ஐ எம் அஃப் அமைப்பில் ரிசர்வாக வைத்து இருக்கிறார்கள் என, அந்நிய செலாவணி தொடர்பாக, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் அறிக்கை சொல்கிறது.
எதில் எவ்வளவு
வெளிநாட்டு கரன்ஸிகள் - 405.6 பில்லியன் அமெரிக்க டாலர்
தங்கம் - 27.17 பில்லியன் அமெரிக்க டாலர்
எஸ் டி ஆர் - 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்
பன்னாட்டு நிதியமான ஐ எம் எஃப்-ல் ரிசர்வாக மத்திய ரிசர்வ் வங்கி வைத்திருப்பது - 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்
ஆக மொத்தம் 437 பில்லியன் அமெரிக்க டாலர் ரிசர்வை மத்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணியாக வைத்திருக்கிறார்கள்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications