கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா?

டெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பல லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து தவிக்கும் நிலையில், இன்னும் பல ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் பல நிபுணர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒரு புறம் எனில் மறுபுறம், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இந்த பண்டிகைகால சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்பது தான்.

கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா?

மேலும் இந்த எதிர்பார்ப்போடு மட்டும் அல்லாது, விற்பனையை ஊக்கப்படுத்த பல சலுகைகளையும் ஆஃபர்களை, தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றன இந்த நிறுவனங்கள்.

இதை ஊக்கப்படுத்தும் விதமாகவே, ஹூண்டாய் பயணிகள் வாகன ஏற்றுமதியானது, நடப்பு நிதியாண்டில் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தியாளர் சங்கம் சியாம் தெரிவித்துள்ளது.

இந்த பயணிகள் வாகன ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 3,65,282 வாகனங்கள் என்றும், இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,49,951 வாகனங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே கார் ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் 5.61 சதவிகிதம் அதிகரித்து, 2,86,495 வாகனங்களாகவும், இதே பயன்பாட்டு வாகனங்கள் ஏற்றுமதியானது 77,397 ஆகவும் உள்ளதாகவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், வேன்கள் ஏற்றுமதி 27.5 சதவிகிதம் சரிவைக் கண்டு, 1,390 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,919 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாய் முதலிடத்திலும், ஃபோர்டு இந்தியா இரண்டாவது இடத்திலும், இதே மாருதி சுசூகி மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் ஃபோர்டு இந்தியா 71,850 வாகனங்களை கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதே மாருதி சுசூகி இந்தியா 52,603 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4.09 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதே வோக்ஸ்வோகன் நிறுவனம் கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 37,908 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே நிசான் மோட்டார் இந்தியா 33,897 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே மகேந்திரா அன்ட் மகேந்திரா 7,280 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே ரெனால்ட் இந்தியா 6,885 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+