ஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண முறை அறிவிப்புக்கு பின்னர் வாடிக்கையாளர் மத்தியில் இது பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை கூல்படுத்துவதற்காக ஜியோவில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதன்முறை 30 நிமிடம் இலவச டாக்டைம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த ஒரு முறை சலுகை கிடைக்கும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

 வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தி
 

வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தி

இந்த நிலையில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் கட்டணம் டிராய் உத்தரவின் பேரில் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்திற்காக ஐ.யு.சி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஜியோ தெரிவித்தது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, அனைத்து அழைப்புகளுக்கும் இலவசம் என்னும் பழைய அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், இது அதன் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 கட்டணத்துக்கு 1ஜிபி டேட்டா இலவசம்

ரூ.10 கட்டணத்துக்கு 1ஜிபி டேட்டா இலவசம்

எனினும் வாடிக்கையாளர்களின் மத்தியில் ஏற்பட்ட இந்த அதிருப்தியால், புதிதாக வாய்ஸ் கால் கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஜியோ சார்பில் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்றும் அறிவித்தது. மேலும் 10 ரூபாய் கட்டணத்திற்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் என்றும், மேலும் ஜியோவின் புதிய அறிவிப்பின் படி அக்டோபர் 9 மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் தொடர்ந்து வாய்ஸ் கால்களை இலவசமாக மேற்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையலாம்

வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையலாம்

ஜியோவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் வாடிக்கயாளார்கள் குறையலாம் என்ற கருத்தால், ஜியோ நிறுவனம் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஜியோவின் இந்த அதிரடியான அறிவிப்பால் இந்த இலவச கால்கள் திட்டம் இருக்கும் வரை வாடிக்கையாளர்கள் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் இதனால் ஜியோவுக்கு பிரச்சனை என்றாலும், மறுபுறம் இதன் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொண்டாட்டத்தில் உள்ளன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு பொன்னான வாய்ப்பு
 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு பொன்னான வாய்ப்பு

பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஜியோவின் இந்த கட்டணம் வசூலிப்பால் மற்ற நிறுவனங்களின் மதிப்பை தொடர்ந்து இது அதிகரிக்கும் என்றும், குறிப்பாக பி.எஸ்,என்.எல் உள்ளிட்ட நிறுவங்கள் மதிப்பை இது அதிகரிக்கும் என்றும் இது நம்புகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.எஸ்.என்.எல் வங்காள வட்டத்தில் சி.ஜி.எம் ராமகாந்த் சர்மா ஜியோவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் 3 -4 % லாபம் பி.எஸ்.என்.எல்லுக்கு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மற்ற நிறுவனங்களில் இலவச சேவை

மற்ற நிறுவனங்களில் இலவச சேவை

ஜியோ தனது இலவச சேவைக்கான கட்டணத்தை உயர்த்தினாலும், மற்ற நிறுவனங்கள் அதை உயர்த்தவில்லை. குறிப்பாக வோடபோன் ஐடியா தனது இலவச அழைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை என உறுதியளித்துள்ளதையடுத்து, மற்ற நிறுவனங்களும் இலவச சேவைகளை வழங்க வித்திட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரியே இலவச சேவை கொடுக்காவிட்டாலும், மக்களுக்கு உரிய சேவையை சரியான நேரத்தில் வழங்கினால் சரிதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio announced offer 30 minutes of free talk time to users

Reliance jio announced offer 30 minutes of free talk time to users, but other telecom operators are very happy about this. Particularly BSNL says its expected 3-4 per cent gain in market share from our current levels due to Jio's IUC announcement.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X