மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

Nirmala Sitharaman’s husband slams bjp goverment economic policy

டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், பொருளாதார நிலை குறித்து கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

 

மேலும் மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தினை மேம்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க விருப்பம் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு புறம் மனைவி பொருளாதார மந்தம் இல்லை என்று கூறி வரும் நிலையில், அவரது கணவரே சற்று எதிர்மறையான கருத்தை கூறியிருப்பது, சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான கொள்கை இல்லை

தெளிவான கொள்கை இல்லை

மேலும் நேருவின் சோசியலியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக, பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதற்கு வழி வகுத்த, ராவ் சிங்கின் பொருளாதார மாதிரியை பாஜக பின்பற்ற வேண்டும் என்றும், தி இந்து பத்திரிக்கைக்கு அளித்துள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு தெளிவான பொருளாதார கொள்கை என்றும் எதுவுமே இருந்தது இல்லை என்றும், இது தனது கொள்கை இல்லை எனக் கூறிவரும் பாஜக, இதுவரை அதன் நிலையான கொள்கை இது தான் என்று தெளிவுபடக் கூறியதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார கொள்கையினால் வெற்றி பெறவில்லை

பொருளாதார கொள்கையினால் வெற்றி பெறவில்லை

நாட்டின் மிகப்பெரிய ஆளும் கட்சியாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும், இது நாட்டில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, பல இடங்களில் வெற்றி பெற்றாலும், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைகளினால் அது வெற்றி பெறவே இல்லை. அதை தற்போது வரை பாஜக உணர்ந்ததும் இல்லை என்றும் சாடியுள்ளார்.

சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
 

சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும் நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை இது வரை பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக விமர்சித்து வருகிறது. இந்த தாக்குதல் அரசியல் தாக்குதலாக உள்ளது. அரசியல் கொள்கைகள் வேறு, பொருளாதார கொள்கைகள் வேறு என்பதைக் கட்சியின் சிந்தனையாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

பொருளாதாரத்தினை சரிசெய்ய இது தான் சரியான நேரம்

பொருளாதாரத்தினை சரிசெய்ய இது தான் சரியான நேரம்

மேலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியைப் போல், முன்பு ஏற்பட்ட போது ராவ் மற்றும் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக முன்வர வேண்டும் என்றும், தற்போது நீரில் மூழ்கும் கப்பலைப் போல் உள்ள உள்ள இந்தியப் பொருளாதார நிலையைச் சீர் செய்ய இதுவே சரியான நேரம் என்றும் பரகலா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM Nirmala sitharaman's husband Parakala Prabhakar said the BJP should adopt the Rao-Singh economic activities

FM Nirmala sitharaman's husband Parakala Prabhakar said the BJP should adopt the Rao-Singh economic activities, also he said govt not shown willingness to frame new policies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X