அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தொடும் என சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

 

கடந்த திங்கட்கிழமையன்று மின்னணு மூலம் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, நடப்பு 2019 - 2020ம் நிதியாண்டில் இந்த சுங்க கட்டணம் வசூலானது 30,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா?

அதுவும் நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 30,000 கோடி ரூபாயாவது இருக்கும் என்றும், மேலும் நாங்கள் நிறைய புதிய ரோடுகளை இன்னும் 5 ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளோம், இதனால் அடுத்த ஐந்து வருடத்தில் சுங்க கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் தற்போது 1.4 லட்சம் கிலோமீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் உள்ளது என்றும், இதில் 24,996 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகளில் தற்போது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன என்றும், இதன் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இது 27,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 75,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும் என்றும், இதன் மூலம் சுங்க சாவடி கட்டண முறைகளில் உள்ல பிரச்சனைகள் முழுமையாக நீங்கி விடும் என்றும் கூறியுள்ளார்.

அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்!

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 டோல் பிளாசாக்களில் 85- 90% மின்னணு கட்டணங்களுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளன என்றும், மீதமுள்ள 10 - 15% டோல் பிளாசாக்களில் நவம்பர் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொத்த டோல் கட்டணத்தில் சுமார் 35% கட்டணங்கள் ஃபாஸ்டேக் வழியாக மின்னணு கட்டணமாக பெறப்படுகிறது என்றும், தினசரி 1 மில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் இதன் மூல 24 கோடி ரூபாய் டிஜிட்டல் மூலமாக பெறப்படுகிறது என்றும் என்.ஹெச்.ஏ.ஐயின் உறுப்பினர் ஆஷிஷ் சர்மார் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nitin gadkari said toll collection next 5 years to touch Rs.1 lak crore

Nitin gadkari said toll collection next 5 years may touch Rs.1 lakh crore, and current financial year its will collected Rs.30,000 crore
Story first published: Tuesday, October 15, 2019, 11:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X