சர்வதேச பன்னாட்டு நிதியம் என்று அழைக்கப்படும் ஐ எம் எஃப் (IMF - International Monetary Fund) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்வளவு இருக்கும் எனக் கணித்து வெளியிட்டு இருக்கிறது.
இந்த கணிப்பில் வழக்கம் போல இந்தியா இவ்வளவு வளரலாம் அல்லது இவ்வளவு வளர்ச்சி குறையலாம் என்று மட்டும் சொல்லி இருந்தால் பரவாயில்லை.
குறிப்பிட்ட இந்த துறைகளால் இந்திய பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கிறது எனக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். சரி முதலில் ஜிடிபி கணிப்பில் இருந்தே தொடங்குவோம்.
தற்போதைய கணிப்பு
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் கணக்குப் படி, இந்தியாவின் பொருளாதாரக் குறியீடான ஜிடிபி, இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 6.1 சதவிகிதம் வரை வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக கணித்து இருக்கிறார்கள். அதோடு அடுத்த நிதி ஆண்டான 2020 - 21 நிதி ஆண்டில் கூட இந்தியப் பொருளாதாரம் (ஜிடிபி) 7.0 சதவிகிதம் வரை மட்டுமே வளர வாய்ப்பு இருப்பதாகவும் கணித்து இருக்கிறார்கள்.
ஜூலை 2019 கணிப்பு
இதற்கு முன்பு கடந்த ஜூலை 2019-ல், சர்வதேச பன்னாட்டு நிதியம், இந்திய ஜிடிபி குறித்த கணிப்புகளை வெளியிட்டது. அப்போது 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் (ஜிடிபி) 7.0 சதவிகிதம் வரை வளரலாம் எனக் கணித்து இருந்தனர். அதோடு 2020 - 21 நிதி ஆண்டில் கூட இந்தியப் பொருளாதாரம் சுமார் 7.2 சதவிகிதம் வரை வளரலாம் எனவும் கணித்து இருந்தார்கள்.
காரணம்
இப்போது சர்வதேச பன்னாட்டு நிதியம், 2019 - 20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபியை, இப்படி 0.9 சதவிகிதம் குறைத்து, தன் கணிப்பை மாற்றிக் கொள்ள என்ன காரணம்..? என்று கேட்டால், இந்தியாவில் உள் நாட்டில் தேவை (டிமாண்ட்) அதிகரிக்கவில்லை என்பதை ஒரு பெரிய காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள், சர்வதேச பன்னாட்டு நிதிய தரப்பினர்கள். இந்த பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வர என்ன எல்லாம் உதவும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதையும் சொல்லி இருக்கிறது ஐ எம் எஃப்.
உதவும் காரணிகள்
இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி, தன் ரெப்போ வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்து வருவது மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களை மத்திய அரசு குறைத்து இருப்பது எல்லாம் இந்தியப் பொருளாதாரம் வளர உதவும் எனச் சொல்லி இருக்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம். அதோடு பல அரசு திட்டங்கள் இந்தியாவின் கிராம புற நுகர்வை அதிகரிக்க உதவியாக இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
என்ன செய்யலாம்
இந்திய பொருளாதாரத்தில், குறிப்பிட்ட துறை சார்ந்த பிரச்னைகளால் தேக்க நிலை இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற துறைகள் பலவீனமாக இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இந்த சிக்கல்களைச் சரி செய்ய தன் வட்டி விகிதங்களை குறைப்பது மற்றும் அடிப்படைக் கொள்கைகளில் சீர் திருத்தங்களைக் (Structural Reform) கொண்டு வருவது போன்றவைகளைச் செய்ய வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
அரசு தரப்பு
இதுவரை, ஆளும் அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களோ முழு மனதுடன் வாயைத் திறந்து, நேரடியாக "இந்தியப் பொருளாதாரம் பெரிய மந்த நிலையில் தான் இருக்கிறது" எனச் சொன்னதாகத் தெரியவில்லை. அதே போல இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதையும் வாயைத் திறந்து ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு இந்த பொருளாதார மந்த நிலை ஒரு சுழற்சி அடிப்படையில் வருவது தான் எனவும் முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடிப்படைக் கொள்கைகள்
ஆனால் இந்த பொருளாதார மந்த நிலையை சரி செய்ய அடிப்படைக் கொள்கைகளில் சீர் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ எம் எஃப் சொல்லி இருக்கிறது என்றால், இந்திய பொருளாதாரத்தில், அடிப்படை கொள்கை ரீதியாக தவறு இருக்கிறது என்று தானே பொருள் வருகிறது. அரசு தனிப்பட்ட மனிதர்களின் விமர்சனங்களை ஒதுக்கலாம். ஆனால் ஐ எம் எஃப் போன்ற பெரிய நிறுவனங்களின் கணிப்பையும், விமர்சனத்தையும், அறிவுரைகளையும் ஒதுக்குவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. எனவே ஐ எம் எஃப்-ன் அறிவுரைகளை அரசு எடுத்துக் கொள்ளும் என நம்புவோம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications