சமீபத்தில் தான் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜனின் மாணவர்களில் ஒருவரான கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை, இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுப்பேன் என மோடி கர்ஜிக்கத் தொடங்கினார். அதற்கு தகுந்தாற் போல தன் பொருளாதார சர்வே விவரங்களையும் இந்த நிதி ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் சமர்பித்தார்.
சரி விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் ஃபிக்கி (FICCI) கூட்டத்தில் பேசிய முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன், கார்ப்பரேட் நிறுவனங்களைத் துணிந்து இந்தியாவில் முதலீடு செய்யச் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணமாக, இந்தியாவின் அடிப்படைகள் (Fundamental) மிக மிக வலுவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். கூடிய விரைவில் மீண்டும் ஆண்டுக்கு 7 - 8 சதவிகித பொருளாதார வளர்ச்சி நிலையை இந்தியா எட்டிப் பிடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இருப்பதற்கு காரணமே இந்தியாவில் முதலீடு குறைந்து இருப்பது தான் எனவும் சொல்லி இருக்கிறார் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் மிகவும் அவசியம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.
தற்போது இந்தியாவில் பொருளாதர மந்தநிலை நிலவும் போது, ஊழியர்கள் குறைந்த விலைக்குக் கிடைப்பார்கள். எனவே இந்த சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட காலத்துக்கு, முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவாக தீர்வுகளைக் கண்டு கொண்டு இருக்கிறது எனவும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
அதோடு கார்ப்பரேட் விவகாரத் துறைக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் படி, இந்திய பெரு நிறுவனங்கள், இந்தியாவின் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமாராக 40,000 கோடி ரூபாய் பிசினஸ் பாக்கித் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த பாக்கி பணத்தை சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு, பெரு நிறுவனங்கள் கூடுமான வரை வேகமாகக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன்.
நம் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சொல்வது போல இந்தியாவின் அடிப்படைகள் வலுவாக இருப்பது உண்மையானால், கடந்த ஒரு ஆண்டு காலமாக சரிந்து கொண்டு இருக்கும் ஆட்டோ துறை விற்பனை கொஞ்சமாவது தேறி இருக்க வேண்டாமா..? ரியல் எஸ்டேட்டில் வீடுகள் விற்பனை கொஞ்சமாவது அதிகரித்து இருக்க வேண்டுமே..? குறைந்தபட்சம் இந்தியாவின் எஃப் எம் சி ஜி நிறுவன விற்பனை வால்யூம்களின் வளர்ச்சியாவது அதிகரித்து இருக்க வேண்டுமே..? எதுவுமே நடக்கவில்லை. ஆனால் அடிப்படை வலுவாக இருக்கிறது எனச் சொல்கிறார். அவர் நம்பிக்கை படி இந்திய பொருளாதாரம் வளர்ந்தால் சரி.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications