என்ன தான் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் என பல பிரச்னைகள் இருந்தாலும் பணக்காரர்கள், எப்போதுமே பணக்காரர்களாகத் தான் இருந்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் எப்போதும் பணக்காரராகவே வலம் வரும் முகேஷ் அம்பானி இப்போது மீண்டும் இன்னொரு பணக்காரர்கள் போட்டியில் அல்லது பட்டியலில் முதல் இடத்தை தட்டிப் பறித்து இருக்கிறார்.
என்ன போட்டி..? என்ன 9 லட்சம் கோடி ரூபாய்..? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாக, விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
ஒரு நிறுவனம், தன்னுடைய மொத்த பங்குகளையும், தற்போதைய விலைக்கு பங்குச் சந்தையில் விற்றால் கிடைக்கும் தொகையே இந்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். உதாரணமாக, ஜான் என்கிற நிறுவனத்தின் பங்கு விலை 10 ரூபாய். இந்த நிறுவனம் மொத்தம் 100 பங்குகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆக இந்த ஜான் நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 10 ரூபாய் * 100 பங்குகள் = 1,000 ரூபாய். இதை எளிய தமிழில் சந்தை மதிப்பு எனச் சொல்லலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இப்போது நம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அல்லது சந்தை மதிப்பு, இந்தியாவிலேயே முதல் முறையாக 9 லட்சம் கோடி ரூபாய் என்கிற மிகப் பெரிய மைல் கல்லைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எப்படி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த 9 லட்சம் கோடி ரூபாய் என்கிற உச்சத்தைத் தொட்டது..? அதை எப்படிக் கணக்கிடுவது...? வாருங்கள் மேற்கொண்டு பார்ப்போம்.
கணக்கு
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் மொத்தம் 6,33,90,38,430 (சுருக்கமாக 633.90 கோடி) பங்குகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த பங்கு எண்ணிக்கை உடன் இன்று மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் உச்சபட்ச விலையான 1,428 ரூபாயை பெருக்கினால் 9,05,214 கோடி ரூபாய் (சுருக்கமாக 9.05 லட்சம் கோடி ரூபாய்) வருகிறது. இப்படித் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பை கணக்கிட வேண்டும்.
எப்படித் தொட்டார்கள்
2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,120 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான், படிப்படியாக ஏற்றம் கண்டு இன்று தன் 52 வார உச்ச விலையான 1,428 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக இந்த 10 மாதங்களில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு 27.5 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டிருக்கிறது.
ஏற்றம் எப்படி சாத்தியமானது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கீழ் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதோடு சவுதி அராம்கோ நிறுவனத்துடன் சில ஒப்பந்தங்கள் போட இருப்பது, ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தைத் தொடங்கி இருப்பது, ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, ஜியோ மட்டும் டெலிகாம் வழியாக லாபம் பார்க்கும் நிறுவனமாக வளர்ந்து இருப்பது என பல விஷயங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையை அதிகரிக்கச் செய்து இருக்கின்றன. எனவே தான் தற்போது முகேஷ் அம்பானி, இந்திய நிறுவனங்கள் எதுவும் தொடாத உயரத்தைத் தொட்டு குதூகலத்தில் இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications