டெல்லி : சென்னையை அடிப்படையாகக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபம் 20.68 சதவிகிதம் அதிகரித்து, 255.01 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மூன்றாவது இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு, இதே காலாண்டில் 211.31 கோடி ரூபாயாக மட்டும் அதன் நிகரலாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே வரி செலுத்தும் முன்பு இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 310.30 கோடி ரூபாயாகவும், இதே செப்டம்பர் 2018ல் 306.2 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஜூலை - செப்டம்பர் வரையிலான வருவாய் 12.84 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 4,352.70 கோடி ரூபாயாக இருந்தது என்றும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4,994.20 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் ஆட்டோ மேஜரின் லாபம் மற்றும் வருவாய் முறையே 397.3 கோடி ரூபாயாகவும், இதே வருவாய் 8,822.6 கோடி ரூபாயாகவும் இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே மொத்த செலவு 4,118.44 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 4,688.05 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஜூலை - செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் 8.42 லட்சம் இரு சக்கர வாகனங்கள் (ஏற்றுமதி உட்பட) விற்பனை செய்துள்ளதாகவும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 10.49 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே மோட்டார் சைக்கிள் வாகன விற்பனை கடந்த இரண்டாவது காலாண்டில் 3.42 லட்சம் வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 4.20 லட்சம் வாகனங்களாகவும், இதே கடந்த காலாண்டில் ஸ்கூட்டர் வாகன விற்பனை 3.33 லட்சம் வாகனங்களாகவும், இது முந்தைய ஆண்டில் 3.88 லட்சம் வாகனங்களாகவும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே டிவிஎஸ் மோட்டார் ஏற்றுமதி 6 சதவிகிதம் அதிகரித்து, 2.11 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதி செய்திருந்ததாகவும், இது முந்தைய ஆண்டில் 1.99 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதி செய்திருந்ததாகவும் டிவிஎஸ் அறிவித்துள்ளது.
இதே மூன்று சக்கர வாகன விற்பனையானது 9 சதவிகிதம் அதிகரித்து 0.43 லட்சம் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 0.40 லட்சம் யூனிட்கள் விற்பனை ஆகி இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications