டெல்லி: கடந்த சில நாட்களாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு தான் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், ஆளும் பாஜகவை விமர்சிக்கும் வகையில் தன் கருத்துக்களை பதிவுச் செய்தார்.

அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில், நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் மோசமான காலமாக இருந்தது, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ வங்கியின் ஆளுநராக இருந்த காலகட்டம் தான்" என தன் கருத்தைப் பதிவு செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில், என்ன தவறு நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காங்கிரஸ் காலத்தில் ஒரு ஃபோன் கால் மூலம் அரசு வங்கிகள் கடன் கொடுத்தது போல் இப்போது கடன்கள் வழங்கப்படுவது இல்லை. நாங்கள் க்ரோனி கேப்பிட்டலிசத்தை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த எல்லா பிரச்னைகளையும், சிக்கல்களையும் பாஜக அரசு தான் சரி செய்து கொண்டிருக்கிறது. அதோடு கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில், என்ன தவறு நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காங்கிரஸ் காலத்தில் ஒரு ஃபோன் கால் மூலம் அரசு வங்கிகள் கடன் கொடுத்தது போல் இப்போது கடன்கள் வழங்கப்படுவது இல்லை. நாங்கள் க்ரோனி கேப்பிட்டலிசத்தை ஆதரிக்கவில்லை. கங்கிரஸ் ஆட்சியில் நடந்த எல்லா பிரச்னைகளையும், சிக்கல்களையும் பாஜக அரசு தான் சரி செய்து கொண்டிருக்கிறது. அதோடு கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதோடு இனி வருங்காலங்களில், அரசு வெளிப்படையாக கொண்டு வர இருக்கும் பொருளாதார கொள்கைகளால், இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


Click it and Unblock the Notifications