ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா?

ஹெச்.டி.எஃப்.சி வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 26.8 சதவிகிதம் அதிகரித்து 6,345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6,345 கோடி ரூபாயாக இலாபம் ஈட்டியுள்ள இந்த தனியார் வங்கி, முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5,005.73 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா?

இதற்கு முக்கிய காரணம் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கியின் வட்டி வருவாய் 14.89 சதவிகிதம் அதிகரித்து, 13,515 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 11,763.4 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது.

இதே சராசரி சொத்தின் வளர்ச்சி 15 சதவிகிதமாக வளர்ச்சியடைந்து, நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.2 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே வட்டி அல்லாத வருவாயானது 5,588.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4,015.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடன் மூலம் 2700.70 கோடி ரூபாயும் இந்த வங்கி சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த தனியார் வங்கியின் மற்ற வருவாய் ஆனது 39.2 சதவிகிதம் அதிகரித்து, 5,588.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4,015.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இதன் மொத்த வருவாய் 33,755 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டினை காட்டிலும் கிட்டதட்ட 20 சதவிகிதம் அதிகமாகும், கடந்த ஆண்டு வருவாய் 28,215.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது.

இதே இந்த வங்கியில் கடந்த செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் டெபாசிட் தொகையானது 1,021,615 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 22.6 சதவிகிதம் அதிகரித்தும், இதே காசா டெபாசிட் தொகையானது 14.7 சதவிகிதம் அதிகரித்து 2,64,445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கரண்ட் அக்கவுண்ட் டெபாசிட் 1,36,791 கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் இந்த வங்கி அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+