மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனம் தற்போது யப் டீவி உடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டார்கள். இந்த புதிய ஒப்பந்தத்தின் படி, பி எஸ் என் எல் நிறுவனத்தின் அகண்ட அலை வரிசை (பிராட்பேண்ட்) வாடிக்கையாளர்கள் யப் டீவியின் சினிமா மற்றும் ஆன்லைன் கண்டெண்ட்களைக் கண்டு களிக்க முடியுமாம்.
யப் டீவி, நெட் ஃப்ளிக்ஸ் போல ஒரு இணைய டீவி தான். இந்த சேனலில் சுமார் 12 மொழிகளில் கண்டுகளிக்க பொழுது போக்கு கண்டெண்ட்கள் இருக்கிறதாம். அதோடு யப் ஃப்ளிக்ஸ் என்கிற பெயரில் கூட சினிமாக்களை வழங்கி வருகிறது.

இந்த பி எஸ் என் எல் மற்றும் யப் டீவி ஒப்பந்தத்தால், தற்போது 2.5 ஜி, 3ஜி, 4ஜி அலை வரிசைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யப் வீடி தன் சேவைகளை வழங்க முடியுமாம்.
பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். யப் டிவி நிறுவனமோ உலக தரத்திலான கண்டெண்ட்களைக் கொண்டு வருகிறார்கள். எனவே நாங்கள் ஒரு புது விகிதத்தில் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வலுவான தொழில்நுட்பத்துடன், நல்ல அனுபவத்தைக் கொடுக்கப் போகிறோம் என பி எஸ் என் எல் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
கண்டெண்ட் தான், டேட்டா நுகர்வை அதிகரிக்கச் செய்யும் முக்கியக் காரணி. அதிலும் ஒரிஜினல் கண்டென்ட் தான் இன்றைய வியபாரத்தை தீர்மானிக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள் யப் டீவி தரப்பினர்கள்.
யப் டீவி உடனான ஒப்பந்தங்களால், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பி எஸ் என் எல் நிறுவனம், அதிக போட்டி நிறைந்த இந்திய டெலிகாம் சந்தையில், மீண்டும் தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற உதவும், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வருவாயையும் ஈட்ட உதவும் எனச் சொல்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, தன் டெலிகாம் சேவையைத் தொடங்கியதில் இருந்து, டெலிகாம் நிறுவனங்கள் மேலே சொன்னது போல கண்டெண்ட் முறையைக் கடை பிடிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. காரணம் ஜியோ வருகைக்குப் பின் கிடைக்கும் மலிவு விலை டேட்டா. எல்லா டெலிகாம் நிறுவனங்களும் மலிவு விலைக்கு டேட்டா கொடுக்கத் தொடங்கியதில் இருந்து, டேட்டா பேக்குகளுக்கான விலை அர்த்தமற்றது ஆகிவிட்டது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications