ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வாடிக்கையாளர்களின் கவலையை போக்க புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலவசம் எல்லாம் இலவசம், வாய்ஸ் கால்கள் அனைத்தும் இலவசம் என்று வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்த ஜியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இனி வாடிக்கையாளர்கள் ஐயூசி கட்டணமாக நிமிடத்துக்கு 6 பைசா செலுத்த வேண்டி இருக்கும் என்றும் அதிரடியாக ஒரு குண்டை தூக்கி போட்டது.

இதனால் இலவச சேவைகளை அனுபவித்த வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

மேலும் இதற்காக வாடிக்கையாளர்கள் தனியாக டாப் அப் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இது ரூ.10லிருந்து ரீசார்ஜ் ஆரம்பிக்கும் என்றும் ஜியோ கூறியது. இதனால் கடுப்பான தனது வாடிக்கையாளர்களை கூல்படுத்த 10 ரூபாய் கட்டணம் செலுத்தினால் 1 ஜிபி டேட்டா இலவசம் என்றும் அறிவித்தது ஜியோ

 

Reliance Jio-வை பின்னுக்கு தள்ளிய Airtel! ஜியோவ முழுசா தூக்க இன்னும் பல திட்டங்கள இறக்க போறோமுங்க!

புதிய திட்டம்

புதிய திட்டம்

இருப்பினும் தனது வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் இழந்து விடக் கூடாது என்பதில் குறியாய் இருக்கும் ஜியோ, அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் போட்டி நிறுவனங்களின் புகாரால், ஜியோ ஐயூசி கட்டணங்களை அமல்படுத்தியது. இதனை வாடிக்கையாளர்களே ஏற்றுக் கொள்ளும்படி, தனித்தனியாக டாப் அப்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் தனது சிறு டாப் பிளான்களையும் கேன்சல் செய்தது. இதனால் கடுப்பில் இருந்த வாடிக்கையாளர்களை கூல் படுத்த தற்போது பல புதிய டாப் அப் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐயூசி தொல்லை

ஐயூசி தொல்லை

ஜியோ நிறுவனம் தனது ஐயூசி கட்டணங்களை அறிமுகப்படுத்திய பின்னர் வாடிக்கையாளர்கள் இதை தொந்தரவு கட்டணமாக நினைக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கூடுதல் கட்டணத்தை ஈடுகட்ட டாப் அப் களை வாங்க வேண்டியதில்லை என்றும், இதற்காக ஜியோ சில அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ரூ.222 பிளானில் என்ன சலுகை?
 

ரூ.222 பிளானில் என்ன சலுகை?

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் என்றும், இதன் மூலம் ஜியோ - ஜியோ இலவசம் என்றும், இதே 1000 நிமிடங்கள் ஜியோ - மற்ற நெட்வொர்க் கால்களுக்கு இலவசம் என்றும், இந்த 1000 இலவச நிமிடங்களுக்கு பின்பே ஐயூசி கட்டணமாக 6 பைசா செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது தவிர தினசரி 2 ஜிபி டேட்டாவும், மேலும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்களும் உண்டு என ஜியோ அறிவித்துள்ளது.

ரூ.333 பிளானில் என்ன சலுகை?

ரூ.333 பிளானில் என்ன சலுகை?

இதே 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஜியோ - ஜியோ இலவசம் என்றும், இதே 1000 நிமிடங்கள் ஜியோ - மற்ற நெட்வொர்க் கால்களுக்கு இலவசம் என்றும், இந்த 1000 இலவச நிமிடங்களுக்கு பின்பே ஐயூசி கட்டணமாக 6 பைசா செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது தவிர தினசரி ஹை ஸ்பீடு 2 ஜிபி டேட்டாவும், மேலும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்களும் உண்டு என ஜியோ அறிவித்துள்ளது. மேலும் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரூ.444 பிளானில் என்ன சலுகை உண்டு?

ரூ.444 பிளானில் என்ன சலுகை உண்டு?

இந்த 444 ரூபாய்க்கு ஜியோ வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், ஜியோ - ஜியோ இலவசம் என்றும், இதே 1000 நிமிடங்கள் ஜியோ - மற்ற நெட்வொர்க் கால்களுக்கு இலவசம் என்றும், இந்த 1000 இலவச நிமிடங்களுக்கு பின்பே ஐயூசி கட்டணமாக 6 பைசா செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது, மேலும் தினசரி ஹை ஸ்பீடு 2 ஜிபி டேட்டாவும், இது தவிர தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்களும் உண்டு எனவும் ஜியோ அறிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் என்றும் கூறப்படுகிறது.

வரம்பற்ற சலுகை

வரம்பற்ற சலுகை

புதிய திட்டங்களில் இலவச வாய்ஸ் கால்களுக்கு பிறகு, நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்கள் என வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய திட்டங்களால் ஜியோ வாடிக்கையாளர்கள் 80 ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை தனியாக வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும், இது முந்தைய பிளான்களுடன் ஒப்பிடும் போது குறைந்ததாகவே இருக்கும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. இதே ஜியோவின் இந்த புதிய திட்டம், மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது புதிய திட்டங்கள் 20-50 சதவிகிதம் மலிவானவை என்றும் ஜியோ கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio announced to users no need to buy top-ups to cover extra charges

Reliance Jio announced to users no need to buy top-ups to cover extra charges, now jio newly announced Rs.222, 333, 444 plans. This new plans are 20-50% cheaper compared with competitors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X