பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுகளை டிராய் நாசப்படுத்துகிறது.. ஜியோ சாடல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், முகேஷ் அம்பானியின் ஜியோவின் அழைப்பு கட்டணங்களை மறுஆய்வு செய்வது, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுகளை நாசப்படுத்தியது போல என்றும் ரிலையன்ஸ் ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.

டிராயின் இந்த நடவடிக்கையால் இது கட்டுப்பாட்டாளரின் நம்பகத் தன்மையை மட்டும் அல்ல, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பாதிக்கும் என்றும் ரிலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் சில பழைய ஆபரேட்டர்களின் சொந்த நலன்களுக்காக, ஐயூசி பிரச்சனையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறன்றனர் என்றும், மேலும் டிராயின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது, சட்டத்தில் மிக மோசமானது, தேவையற்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளது ஜியோ.

முடிவுக்கு வரும் இலவச சேவை
 

முடிவுக்கு வரும் இலவச சேவை

ஜனவரி 1,2020 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் கட்டண நடைமுறையால் இலவச கால் சேவை என்பது முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும், இதனால் நுகர்வோர் நலனுக்கான கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஜியோ கூறியுள்ளது. பொதுவாக ஒரு தொலைத் தொடர்பு ஆப்பரேட்டர் அதன் சந்தாதாரர்கள் ஒரு போட்டி நிறுவனத்துக்கு செய்த அழைப்புகளை முடிக்க கட்டணம் செலுத்துகிறார்.

ஐயூசி கட்டணம்

ஐயூசி கட்டணம்

உதாரணத்திற்கு ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஒரு வாடிக்கையாளர் ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதைத் தன் ஐயூசி கட்டணம் என்றும் கூறுவார்கள். இந்த ஐயூசி கட்டணத்தை ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்போவதாகவும் ஏற்கனவே ஜியோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பணம் சுரண்டல்

பணம் சுரண்டல்

இதற்காக டிராய்க்கு ஐயூசி விஷயத்தில் உத்தியோகப்பூர்வ பதிலை அழைத்த ஜியோ, சில பழைய ஆப்ரேட்டர்கள், தங்கள் 2ஜி வாடிக்கையாளர்களின் குரல் அழைப்புகளுக்கு கட்டாயமாக பணம் வசூலிப்பதன் மூலம், பணத்தை சுரண்டுவதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜியோவின் 4ஜி மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சேவைகளை வழங்குகின்றன என்று ஜியோ கூறியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உதவ ஆலோசனை
 

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உதவ ஆலோசனை

இந்தியா தொழில் நுட்ப ரீதியாக தேக்கமடைந்து பின் தங்கிய நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறது என்றும் ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த சமுதாயத்தில் ஓரங்கட்ட பிரிவினருக்கு லாபம் கொடுப்பதற்கு பதிலாக, தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடியவர்களுக்கு உதவ டிராய் ஆலோசனை கூறி வருகிறது என்றும், இது மிக துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.

நிலைமை தலைகீழாக மாறும்

நிலைமை தலைகீழாக மாறும்

சீர்குலைக்கும் இந்த கட்டணங்கள், விரைவில் தலைகீழாக மாறும் என்றும், தற்போது பணம் பெறுபவர்கள் விரைவில் பணம் செலுத்துவார்கள் என்றும், இந்த குறிப்பிட்ட காலக்கெடு எந்தவொரு ஆப்ரேட்டர்களையும் நிதி அழுத்தத்தில் இருந்து விலக்க போவதில்லை என்றும், இந்த இலவச சேவை முடிவுக்கு வரும் நிலையில், ஒட்டுமொத்த கட்டணங்களும் குறையும் என்றும் ஜியோ கூறியுள்ளது.

யார் எந்தக் கட்டணம் வசூலித்தாலும் சரி, கட்டணம் வசூலிப்பவர்களாக இருந்தாலும் சரி, இதெல்லாம் பொதுமக்களின் தலையிலேயே வந்து விழும் பாரம் என்பது தான் உண்மையே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

c

Reliance jio says TRAI's IUC review would affect Modi's digital India mission, and its made way to ending its free call regime.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X