ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்மையில் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை, பணி நீக்கம் போன்றவற்றில் இந்தியா சிக்கித் தவித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், EPFO தரவுகளின் படி, கடந்த ஆகஸ்ட் 2019ல் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (EPFO) தரவுகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது பெரிய வேலை உருவாக்கம் என்றும் கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு!

இது கடந்த ஜூலை மாதத்தில் 11.17 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை விட கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலை உருவாக்கம் குறைவு என்றாலும், நடப்பு நிதியாண்டில் பல லட்சம் பேர் வேலையிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கேற்றவாறு வேலை உருவாக்கமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் இந்த தரவுகள் கூறுகின்றன.

இதே சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் 2017 முதல் 1.23 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரையில் 15.53 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே 2019ம் நிதியாண்டில் மொத்தம் 61.12 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே நடப்பு நிதியாண்டில் இதுவரை 47.3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்த தரவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2019ல் மொத்தம் 8.73 லட்சம் புதிய உறுப்பினர்கள் இ.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதே நேரத்தில் 2.7 லட்சம் பேர் வெளியேறினர் என்றும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் மீண்டும் வேலையில் சேர்ந்து, மீண்டும் சந்தா செலுத்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக இருந்தது என்றும், இந்த மாதத்திற்கான நிகர ஊதிய எண்ணை 10.86 லட்சமாக உயர்த்தியது.

இதே கடந்த ஆகஸ்ட் 2019ல் 22-25 வயதுக்குட்பட்டவர்களில் 2.93 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே 18 - 21 வயதுக்குட்பட்டவர்களில் 2.83 லட்சம் வேலைகளும் உருவாக்கப்பட்டதாகவும், இதே 26 - 28 வயதுக்குற்பட்டோர்களில் மொத்தம் 1.89 லட்சம் வேலைகளும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.77 லட்சம் வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதே ஓய்வூதிய நிதி அமைப்பு ஏப்ரல் 2018 முதல் ஊதிய தரவுகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இந்த தர மதிப்பீடுகளில் தற்காலிக ஊழியர்களும் இருக்கலாம் என்றும், எனினும் இதன் பங்களிப்பு ஆண்டு முழுவதும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO said last august month created net employment in 10.86 lakh

EPFO said last august month created net employment in 10.86 lakh, and july report less than 11.17 lakh job.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X