மும்பை: அஜய் பிரமல் தலைமையிலான பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபம் 15.3 சதவிகிதம் அதிகரித்து, 554 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அதன் பார்மா மற்றும் ஹெல்த்கேர் வணிகத்தில் வலுவான செயல்திறனே என்று கூறப்படுகிறது. இதனாலேயே கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனம் நல்ல லாபத்தை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மும்பையை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கூட்டு நிறுவனம், நிதி சேவைகள், பார்மா, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் வணிகங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்து 3608.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே பிரமல் எண்டர்பிரைசஸின் பார்மா குறித்தான வணிகம் 19 சதவிகிதம் அதிகரித்து, 1316 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதன் இந்திய நுகர்வோர் தயாரிப்புகள் குறித்தான நல்ல வளர்ச்சியையும் கண்டுள்ளது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 39 சதவிகிதம் அதிகரித்து, 112 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெல்த்கேர் துறையில் வளர்ச்சி 14 சதவிகிதம் அதிகரித்து 333 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் தொடர்ந்து பார்மா மற்றும் ஹெல்த்கேர் நுண்ணறிவு வணிகங்கள் தொடர்ந்து காலாண்டுகளில் வலுவான செயல்திறனை வழங்குகின்றன. இது இயற்கையான ஹெட்ஜாக செயல்படும் என்றும், இது இந்த நிறுவனத்தின் செயல்திறனுக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது சந்தை மிக கொந்தளிப்பான சூழலில் கூட இப்படி ஒரு திறனை கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரமல் கேப்பிட்டல் அண்ட் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் புத்தகம் கடந்த இரண்டாவது காலாண்டில் 53,055 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 56,605 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வீட்டு நிதி கடன் புத்தகம் ஆண்டுக்கு மூன்று மடங்கு அதிகரித்து, 6,393 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இதன் வளர்ச்சி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதே நிதி தொடர்பான வர்த்தகத்தில் செப்டம்பர், 30 நிலவரப்படி, அதன் மொத்த கடன் இலாகாவிலிருந்து 6,525 கோடியை திருப்பிச் செலுத்துகிறது. இது முந்தைய காலாண்டில் 4,758 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications