இன்று சந்தையில் ஏகப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், தங்களின் காலாண்டு முடிவுகளினால் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகளைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் சுமார் 39,000 புள்ளிகளை நெருங்கியே இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை மட்டும் சுமார் 15 சதவிகிதம் சரிந்து இருப்பதும் சென்செக்ஸின் ஒட்டு மொத்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில், யெஸ் பேங்க் தான் அதிகபட்சமாக 3.21 சதவிகிதம் ஏற்றம் கண்டிருக்கிறது. அதன் பிறகு ஐசிஐசிஐ பேங்க் தான் 2.8 % ஏற்றம் கண்டிருக்கிறது. ஆக இன்று சென்செக்ஸ் சந்தை 39,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைவதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 39,298 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 39,233 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 38,966 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து வர்த்தகமாகத் சுமார் 330 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பி.எஸ்.இ-யில் 2,660 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,228 பங்குகள் ஏற்றத்திலும், 1,227 பங்குகள் இறக்கத்திலும், 205 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. மொத்தம் 2,660 பங்குகளில் 80 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 202 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி, ஆட்டோ, மெட்டல் தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்மா, வங்கி போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் ஓரளவுக்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.
பாரத் பெட்ரோலியம், ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், ஐசிஐசிஐ பேங்க், டைடன் கம்பெனி, சிப்லா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications