2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்!
டாடா ஸ்டீல் இந்தியாவின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் ஐரோப்பா நிறுவனம், 930 மில்லியன் டாலர் செலவினை குறைக்க 2,500 பேரை பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இது அதன் மொத்த மனித வளத்தில் 25 சதவிகிதம், என்றும் கூறப்படுகிறது.
மேலும் டாடா ஸ்டீல் நெதர்லாந்தில் உள்ள நிறுவனம், இந்த தொகையில் பெரும் பகுதியை கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக 170 மில்லியன் யூரோக்களை செலவில் இருந்து சேமிக்க வேண்டும் என்றும், தனது ஊழியர்களுக்கு எழுதிய குறிப்பில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆலை குறைப்பு நடவடிக்கை
இதே டாடா ஸ்டீல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அதன் ஆலைகளையும் குறைக்கும் என்றும் டச்சு மீடியாவில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக மந்த நிலையால் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை என்பதை எடுத்து வந்தாலும், ஆலைகளை குறைக்கும் நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. ஆனால் ஆட்டோமொபைல் துறையில் உள்ள மந்த நிலையால், டாடா ஸ்டீல் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியே தற்போது ஸ்டீல் துறையிலும் காணப்படுகிறது.
ஆட்குறைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் டச்சு தொழிலாளர் சங்கம், மத்திய பணிகள் ஒன்றியம், டச்சு செயல்பாடுகள் லாபகரமானவை என்பதால் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் துறையில் நிலைமை சரியில்லை, அது எங்களுக்கும் தெரியும், ஆனால் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளன. மேலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த திட்டம் நவம்பர் மாத இறுதிக்குள் இருக்கும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
செலவை குறைக்க திட்டம்
இது குறித்து டாடா குழுமம் ஏற்கனவே செய்தி நிறுவனங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், டாடா குழுமம் தனது இந்திய நடவடிக்கைகள் பற்றியும், அதே நேரத்தில் ஒடிசாவிலுள்ள தனது கலிங்காநகர் ஆலையில் முதலீடுகளை அதிகரித்தது குறித்தும் கூறியுள்ளது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2020ம் நிதியாண்டிற்கான மூலதன செலவாக 12,000 கோடி ரூபாயிலிருந்து, 8,000 கோடி ரூபாயாக குறைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ஆட்குறைப்பு இருக்கலாம்
எனினும் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான அசல் திட்டத்தை (செயல்பாடுகள்) விட 20- 25 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலமை செயல் அதிகாரி டிவி நரேந்திரன் நிச்சயம் இது இந்தியா மற்றும் ஐரோப்பிய தரப்பில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications