பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 22 சதவிகிதம் அதிகரித்து, 1,402 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதுவே முந்தைய காலாண்டில் 1152.48 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனம் எதிர்பார்த்ததை விட சிறந்த வருவாயை பதிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 70 ரூபாய் அதிகரித்து 3,193 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது.

இந்த மந்த நிலையிலும் இலாபம் அதிகரித்தது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் கார்ப்பரேட் வரி விகித குறைப்பு, செலவினங்களை குறைக்க உதவியதாகவும், இது சுமார் 182 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் டேக்ஸ் செலவினங்கள் 206.49 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்றும், இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 500.17 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே செயல்பாட்டு வருவாய் 4 சதவிகிதம் குறைந்து, 7,707 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 8,036.34 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதே செயல்பாட்டு மூலதனம் கூட 16.9 சதவிகிதமாக குறைந்ததாகவும், இது முந்தைய ஆண்டு 17.9 சதவிகிதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதே இந்த காலாண்டில் இதன் வாகனங்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் குறைந்து, 1,17,3,591 வாகனங்களாக உள்ளது, இது முந்தைய காலாண்டில் 1,339,444 வாகனங்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு மோட்டார் சைக்கிள் துறை மிக மோசமாக இருந்தது என்றும், இதில் சில்லறை வர்த்தகம் 14 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், இதே பஜாஜ் ஆட்டோ விற்பனையிலும் மந்த நிலையே காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதே இந்த நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் 41 சதவிகிதம் பங்கு வகிக்கும் சர்வதேச வணிகம், பஜாஜ் ஆட்டோ விற்பனை 5,44,000 வாகனங்களாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications